பொதுப்பணித்துறையில் வேலை.. என்ஜினியரிங் முடித்தவர்களுக்கு ஜாக்பாட்.. புதுவை அரசின் மெகா அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: புதுவை பொதுப்பணித்துறையில் காலியாக உள்ள 168 ஜூனியர் என்ஜினியர் & கண்காணிப்பாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வரும் 31.08.2024 தான் கடைசி நாளாகும். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. தமிழகத்தை சேர்ந்தவர்கள் விண்னப்பிக்கலாமா? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

புதுவை பொதுப்பணித்துறையில் காலியாக உள்ள ஜூனியர் என்ஜினியர், கண்காணிப்பாளர் (overseer) உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்... கல்வி தகுதி என்ன? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்காலம்.

job jobs Employment

பணியிடங்கள் விவரம்:
ஜூனியர் என்ஜினியர் (சிவில்) - 99 Posts
கண்காணிப்பாளர் - 69 பணியிடங்கள்
என மொத்தம் 168 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கல்வி தகுதி: ஜூனியர் என்ஜினியர் சிவில் பணியிடங்களுக்கு சிவில் என்ஜினியர் பிரிவில் டிப்ளமோ அல்லது இளநிலை பட்டம் பெற்று இருக்க வேண்டும். கண்காணிப்பாளர் பணிக்கு சிவில் என்ஜினியரிங் பிரிவில் மூன்று ஆண்டுகள் கொண்ட டிப்ளமோ முடித்து இருக்க வேண்டும். என்ஜினியரிங் டிகிரி முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கல்வி தகுதி பற்றிய முழு விவரங்களை தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் தேர்வு அறிவிப்பில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

வயது வரம்பு: 31.08.2024- தேதி நிலவரப்படி ஜூனியர் என்ஜினியர் பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 30 ஆகும். அதேபோல கண்காணிப்பாளர் பணியிடத்திற்கும் 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்க முடியாது. எனினும் அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ்.சி /எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் ஒபிசி /பிசிஎம்/இபிசி/எம்பிசி ஆகிய பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு. அதாவது இந்த பிரிவினர் 33 வயது வரை விண்ணப்பிக்க முடியும்.

தேர்வு முறை: எழுத்து தேர்வு நடைபெறும். எழுத்து தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகு தகுதியான விண்ணப்பதார்ர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்து தேர்வில் பொது ஆங்கிலம், பொது அறிவு, அறிவியல், ரீசனிங்க் உள்ளிட்ட கேள்விகள் இடம் பெற்று இருக்கும். இரண்டாம் தாள் தேர்வில் சிவில் என்ஜினியரிங் சார்ந்த கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு தவறான கேள்விக்கு 0.25 மதிப்பெண்கள் கழிக்கப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி?: புதுவை யூனியன் பிரதேசத்த்தில் வசிப்பவர்கள் மட்டுமே இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க முடியும். புதுவையை பிறப்பிடமாக கொண்டவர்கள் அல்லது புதுவையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக வசிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பிட சான்றிதழ் தகுந்த வருவாய் பிரிவு அலுவலரிடம் இருந்து பெற்றிருக்க வேன்டும். தேவையான கல்வி தகுதியும் இதர தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கிய நாள்: 12.08.2024
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.08.2024 ஆகும்.

தேர்வு அறிவிப்பை படிக்க: விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பினை படிக்க இந்த லிங்கை https://pwd.py.gov.in/notification-direct-recruitment-filling-vacant-post-junior-engineer-civil-and-overseer-public-works கிளிக் செய்யவும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+