பஞ்சாப் நேஷனல் வங்கியில் சிறப்பு அதிகாரி வேலை! 350 பணியிடம்! பிஇ/பிடெக் முடிச்சவங்களுக்கு செம சான்ஸ்
டெல்லி: பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கியில் 350 சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும்? இதற்கான கல்வித் தகுதி என்ன? போன்ற விவரங்களை இங்கு பார்க்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.48,000 முதல் ரூ.1 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும்.
இந்தியாவில் 12 பொதுத்துறை வங்கிகள் உள்ளன. மத்திய நிதி அமைச்கத்தின் கீழ் செயல்படும் இந்த பொதுத்துறை வங்கிகளில் ஆட்சேர்ப்பு பணிகள் ஐபிபிஎஸ் மூலமாக பெரும்பாலும் நடக்கின்றன. எனினும் சில சிறப்பு அதிகாரி பணியிடங்கள் நேரடியாகவும் நிரப்பப்படுகின்றன. அந்த வகையில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் 350 சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:
* அதிகாரி கிரெடிட் (கிரேடு JMGS-I) - 250
* அதிகாரி - இண்டஸ்ட்ரி (கிரேடு JMGS-I) - 75
* மேலாளர் - IT (கிரேடு MMGS-II) - 05
* மூத்த மேலாளர்-IT (கிரேடு MMGS-III) - 05
* மேலாளர் - டேடா சயிண்டிஸ்ட் (கிரேடு MMGS-II) - 03
* சீனியர் மேனேஜர் டேடா சயிண்டிஸ்ட் (கிரேடு MMGS-III) - 02
* மேலாளர் - சைபர் பாதுகாப்பு (கிரேடு MMGS-II) - 05
* சீனியர் மேனேஜர் - சைபர் பாதுகாப்பு (கிரேடு MMGS-III) - 05 என மொத்தம் 350 பணியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: பி இ/ பிடெக், எம்.பிஎ, எம்.சி.ஏ, சிஏ முடித்தவர்களுக்கான பணியிடங்கள் உள்ளன. பணியின் தன்மைக்கு ஏற்பட பணியிடம் மாறுபடும். கல்வி தகுதி குறித்த முழு விவரங்களை தேர்வர்கள் தேர்வு அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு: சிஏ கல்வி தகுதி கொண்ட கிரெடிட் ஆபிசர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் 20 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு 30 ஆகும். சீனியர் மேனேஜேர், சீனியர் மேனேஜர் டேடா சயிண்டிஸ்ட், சைபர் செக்யூரிட்டி ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 38 ஆகும். அரசு நிர்ணயித்த விதிமுறைகளின்படி வயது உச்ச வரம்பில் தளர்வுகளும் அளிக்கப்படும்
சம்பளம் எவ்வளவு?:
கிரெடிட் ஆபிசர், சைபர் இன்டஸ்ட்ரி: ரூ.48,480 - 85,920 வரை
மேனேஜர் ஐடி: ரூ.64,820 - 93,960 வரை
சீனியர் மேனேஜர் (சைபர் பாதுகாப்பு): ரூ.85,920- ரூ.1,05,280 வரை
விண்ணைப்பிப்பது எப்படி?: தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முன்பாக கல்வி தகுதி உள்ளிட்டவற்றை நன்கு படித்து அறிந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். விண்ணப்பிக்க வரும் 24.03.2025 கடைசி நாளாகும். https://www.pnbindia.in/Recruitments.aspx என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் ரூ.1,180-ஆகும். எஸ்.சி/எஸ்.டி, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு ரூ.59 கட்டணம் ஆகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: Click Here












Click it and Unblock the Notifications