மதுரை ஐடி நிறுவனத்தில் சூப்பர் வேலை.. அனுபவம் தேவையில்லை.. செப்டம்பர் 6ம் தேதி இண்டர்வியூ
மதுரை: மதுரையில் செயல்பட்டு வரும் ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு அனுபவம் தேவையில்லை. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் செப்டம்பர் 6 (நாளை) நடைபெறும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
தற்போது நாம் அனைவரும் நல்ல துறையில் அதிக சம்பளத்தில் வேலைக்கு செல்ல வேண்டும் என்று விரும்புகிறோம். குறிப்பாக தற்போது பல இளைஞர்கள் சாப்ட்வேர் துறையில் பணியாற்ற ஆர்வமாக உள்ளனர்.

RadicalStart என்பது சாப்ட்வேர் டெவலப்மென்ட் நிறுவனமாகும். இந்த நிறுவனம் மதுரையில் செயல்பட்டு வருகிறது. மாடர்ன் வெப் அப்ளிகேஷன் டெவலப்மென்ட், மொபைல் அப்ளிகேஷன் டெவலப்மென்ட் உள்பட பல்வேறு சேவைகளை இந்த நிறுவனம் வழங்கி வருகிறது.
இந்த நிறுவனத்தில் இருந்து தற்போது ஃபுல் ஸ்டாக் டெவலப்பர் (Full Stack Developer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு Node.js (Express.js), MySQL, React உள்ளிட்டவை ஸ்கில்ஸாக இருக்க வேண்டும். இந்த பணிக்கு பணி அனுபவம் இல்லாதவர்களும் (Freshers), முன்அனுபவம் கொண்டவர்களும் விண்ணப்பம் செய்யலாம். பணி அனுபவம் இல்லாதவர்களும் என்றால் 2023 முதல் 2025ம் ஆண்டுக்குள் கல்லூரி படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்கான இண்டர்வியூ செப்டம்பர் 6 (நாளை)ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் RadicalStart InfoLab Private Limited, 6th floor, MIG - 341, 80 Feet Road, Anna Nagr, Madurai என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 7867004400 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications