Railway job: ரயில்வே குரூப்-டி வேலை வேணுமா? தமிழக அரசு தரும் இலவச பயிற்சி! போட்டி தேர்வர்கள் மிஸ் பண்ணிடாதீங்க
சென்னை: ரயில்வேயில் குரூப் -டி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருக்கும் நிலையில் தேர்வர்கள் பலரும் தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள். இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் குரூப் டி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகளை தொடங்கி உள்ளது. இன்று முதல் இந்த பயிற்சி வகுப்புகள் நடக்கிறது. இது குறித்த விவரங்களை இங்கு காணலாம்.
அரசுத் துறைகளில் பணியாற்ற வேண்டும் என்பது தற்போதைய இளைஞர்களின் கனவுகளாக உள்ளது. அதிலும் குறிப்பாக மத்திய அரசின் ரயில்வே துறையில் பணியாற்ற வேண்டும் என ஆண்டுக்கணக்காக படித்து வருவதையும் பார்க்க முடியும்.

ரயில்வேயில் 22,195 பணியிடங்கள்
தற்போது ரயில்வே துறையில் தேர்வர்கள் பலரும் எதிர்பார்த்த குரூப் டி-யில் 22,195 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. நாட்டின் மிகப்பெரிய அரசு நிறுவனம் என்பதாலும், வேலை செய்யும் ஊழியர்களுக்கு கை நிறைய சம்பளம், குடியிருப்பு, பயண வசதி சலுகைகள் என பல்வேறு சலுகைகள் வழங்கப்படுவதாலும் ரயில்வேயில் பணியாற்ற பலரும் விரும்புகின்றனர்.
நாடு முழுவதும் பல லட்சக்கணக்கான தேர்வர்கள் ரயில்வே வேலைக்கு தயாராகி வருகிறார்கள். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு பலரும் விண்ணப்பித்து படித்து வருகிறார்கள். சிலர் தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் டெஸ்ட்களையும் எழுதி வருகிறார்கள். இந்த நிலையில் தேர்வுக்கு தயாராகுபவர்களுக்காக இலவச பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.
இலவச பயிற்சி வகுப்பு
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின்கீழ் இயங்கிவரும் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், உளவியல் பகுப்பாய்வு சோதனைகளுடன் கூடிய வழிகாட்டுதல், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் வழங்குதல், போட்டித் தேர்வுகளுக்கான நேரடி பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரித் தேர்வுகள், கல்வி தொலைக்காட்சி வாயிலாக போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இன்று முதல் ஆரம்பம்
போட்டித் தேர்வுகளுக்கு, திறமையான, அனுபவமிக்க பயிற்றுனர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் பாடக்குறிப்புகள், தினசரி, மாத இதழ்கள், முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் ஆகியவை வழங்கப்படுவதுடன் பாடவாரியான துணைத்தேர்வுகள், மாதிரித் தேர்வுகள் ஆகியவையும் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், ரயில்வேயில் குரூப்-டி போட்டித்தேர்வுக்கான பயிற்சி வகுப்பானது இன்று(புதன்கிழமை) முதல் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரையிலான அனைத்து வேலைநாட்களிலும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது.
பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள்
இதில் பங்கேற்க விருப்பமுள்ள போட்டித்தேர்வர்கள் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையம், ஏ-28, முதல் தளம், டான்சி கட்டிடம், திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை-32 என்ற அலுவலக முகவரியிலும், 044-22500134, 9361566648 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். மேற்கண்ட தகவல் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications