Railway job: ரயில்வேயில் 1,250 காலிப்பணியிடங்கள்.. டிகிரி முடித்தவர்களுக்கு ஜாக்பாட்.. 1.12 லட்சம் சம்பளம்!
சென்னை: ரயில்வேயில் ஸ்டேஷன் மாஸ்டர் பணியிடங்களை நிரப்ப ஆர்.ஆர்.பி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 1,250 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை சம்பளம் வழங்கப்படும்.
ரயில்வே துறையில் காலியாக பணியிடங்களை ஆர்.ஆர்.பி எனப்படும் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் நிரப்பி வருகிறது. மத்திய அரசின் பொதுத்துறை என்பதால் ரயில்வே பணியில் சேர வேண்டும் என்பது தேர்வர்களின் பெரும் லட்சியங்களில் ஒன்றாக உள்ளது. இதனால் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியமான ஆர்.ஆர்.பி வெளியிடும் தேர்வு அறிவிப்பை ஆர்வத்துடன் தேர்வர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில்தான் ரயில்வே துறையில் காலியாக உள்ள ஸ்டேஷன் மாஸ்டர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள்:
ஸ்டேஷன் மாஸ்டர்: 1,250- காலியிடங்கள்
கல்வித் தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்து இருக்க வேண்டும். வயது வரம்பை பொறுத்தவரை 01.01.2027 அன்று தேதிப்படி18 வயது முதல் 33 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் சலுகைகள் அளிக்கப்படும்.
சம்பளம் எவ்வளவு:
தேர்வு செய்யப்படும் ஸ்டேஷன் மாஸ்டர் பணியிடங்களுக்கு மத்திய அரசின் 7-வது ஊதிய கமிஷன் விதிகளின் படி சம்பளம் வழங்கப்படும். அதாவது, அடிப்படை சம்பளம் ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு முறை:
சிபிடி எனப்படும் கணினி வழியிலான தேர்வு, கணினி வழியில் திறன் தேர்வு (CBAT), சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை உள்ளிட்டவைகளின் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். தேர்வு எழுதிய பிறகு ரூ.400 திருப்பி அளிக்கப்படும். எஸ்சி/எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு கட்டணமாக ரூ.250 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதிய பிறகு முழு கட்டணமும் (ரூ.250) திருப்பி அளிக்கப்படும்.
விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கும் நாள்: 27.10.2026 ஆகும். விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.11.2026 ஆகும்.
தேர்வு அறிவிப்பை பார்க்க: Click Here



Click it and Unblock the Notifications
