ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் காத்திருக்கும் வேலை.. நல்ல சம்பளம்...விண்ணப்பிக்க ரெடியா?

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் செயல்படும் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மைய காலிப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் பெண்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

பல்நோக்கு பெண் உதவியாளர் மற்றும் காவலர் பணியிடம் நிரப்பப்பட உள்ள நிலையில் ராமநாதபுரம் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் அக்டோபர் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Ramanathapuram Government Hospital jobs, good salary; ready to apply?

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் ராமநாதபுரம் மாவட்டத்தில் வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம் என்ற அமைப்பு ராமநாதபுரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.

இந்த மையத்தில் தொகுப்பூதிய ஒப்பந்த அடிப்படையில் 1 பல்நோக்கு பெண் உதவியாளர் மற்றும் காவலர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. உதவியாளர் பணிக்கு எழுத, படிக்க மற்றும் சமையல் தெரிந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.6,400. மேலும் 1 காவலர் பணியிடத்திற்கு முன்னாள் ராணுவ பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். சம்பளம் ரூ.10,000. ஆண், பெண் விண்ணப்பிக்கலாம்.

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த, 24 மணிநேர சுழற்சி பணியாற்ற தயாராக உள்ளவர்கள் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் வருகிற 31-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+