30 லட்சம் லஞ்சம்.. தவெகவுக்கு தலைவலியை தந்த பெண் வக்கீல்! பாய்ந்த நடவடிக்கை.. பரபரப்பு புகார்!

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: தமிழக அரசின் வழக்கறிஞர்கள் நியமனத்தில் ஊழல் நடைபெற்று இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த ஞானசௌந்தரி, வழக்கு தொடர்ந்த அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். இந்த நிலையில் தன்னைக் கட்சியிலிருந்து நீக்கியது சட்ட விரோதம் என்றும் மாவட்ட செயலாளருக்கு அதற்கான அதிகாரம் இல்லை என கூறி இருக்கிறார்.

தமிழகத்தில் ஆட்சி மாறி இருக்கும் நிலையில் தமிழக அரசு சார்பில் அரசு வழக்கறிஞர் நியமனம் நடைபெற்று வருகிறது. பொதுவாக ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் தான் அரசு வழக்கறிஞர்களாக நியமனம் செய்யப்படுவது வழக்கம்.

TVK Lawyer tn Government

ஆனால் தமிழக வெற்றிக் கழகத்தில் அவ்வாறு சிபாரிசு எல்லாம் இருக்கக் கூடாது தகுதியின் அடிப்படையில் வழக்கறிஞர் நியமனம் செய்யப்பட வேண்டும் என விஜய் உத்தரவிட்டதாக சொல்லப்படுகிறது. இதை அடுத்து முறையான அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிடப்பட்டு தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று நிறைவடைந்தது.

இதற்கிடையே உத்தேச பட்டியல் என சமூக வலைதளங்களில் ஒரு பட்டியல் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் தான் இந்த விவகாரத்தில் திடீர் திருப்பம் ஒன்று ஏற்பட்டது. அதாவது விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த வழக்கறிஞரும் தமிழக வெற்றிக் கழகத்தின் அடிப்படை உறுப்பினருமான ஞானசௌந்தரி என்பவர் அரசு வழக்கறிஞர் பணிக்கு விண்ணப்பித்திருந்தார். இந்த நிலையில் அரசு வழக்கறிஞர் நியமனப் பட்டியலில் தனது பெயர் இல்லை என தெரிந்து கொண்டதோடு நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள மனுவில்,' அரசு வழக்கறிஞர் நியமனத்தில் 5 லட்சம் ரூபாய் முதல் 30 லட்சம் ரூபாய் வரை தமிழக வெற்றிக்கழக அமைச்சர்களும், மாவட்ட செயலாளர்களும் லஞ்சம் பெற்றிருப்பதாகவும், இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். என்னை விழுப்புரம் மாவட்ட அரசு வழக்கறிஞராக நியமிக்க வேண்டும் அதுவரை அறிவிப்பானைக்கு தடை விதிக்க வேண்டும் என கேட்டிருந்தார்.

இதற்கிடையே விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு நீதிமன்றங்களுக்கான அதிகாரப்பூர்வ அரசு வழக்கறிஞர்கள் பட்டியல் வெளியாகி இருக்கிறது. அந்த பட்டியலில் ஞானசௌந்தரியின் பெயர் இடம் பெறவில்லை. இந்த நிலையில் அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து நீக்குவதாக தமிழக வெற்றி கழகம் அறிவித்திருக்கிறது. இந்த நிலையில் தன்னைக் கட்சியிலிருந்து நீக்கியது சட்ட விரோதம் என்றும் மாவட்ட செயலாளருக்கு அதற்கான அதிகாரம் இல்லை என கூறி இருக்கிறார்.

இதுதொடர்பாக பேசியுள்ள ஞானசெளந்தரி," உயர்நீதிமன்றத்தில் தனது வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தான் கோரியபடி விண்ணப்பதாரர்களை நேர்காணல் நடத்தி முறையாக தேர்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றம் பரிசீலித்ததாகவும், தீர்ப்பு நகல் இன்னும் வெளியாகவில்லை. தீர்ப்பு வெளியாகும் முன்பே, கட்சிக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி மாவட்ட செயலாளர் குஷி மோகன் தன்னை அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கினார். மற்ற நிர்வாகிகள் தன்னுடன் தொடர்பு கொள்ளக் கூடாது என அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே தன்னை புறக்கணிப்பதாகவும், கட்சி நிர்வாகிகள் தன்னுடன் தொடர்பு கொண்டால் அவர்கள்மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டப்பட்டதாகவும் தெரிவித்தார். அரசு வழக்கறிஞர் நியமனத்தில் பணம் பெறப்பட்டதாகக் கூறப்படும் ஆடியோ ஆதாரங்கள் மற்றும் தொடர்புடைய ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாகவும், அவை தேவையான நேரத்தில் தாக்கல் செய்யத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

தன்னை நேரடியாக யாரும் விளக்கம் கேட்கவில்லை என்றும், வழக்கை வாபஸ் பெறும்படி தனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மூலம் சமரச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், மேலும், அரசு வழக்கறிஞர் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்படவில்லை என்றும், விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணலே நடத்தப்படவில்லை என்றும் ஞானசெளந்தரி குற்றம்சாட்டினார்.

தவெக தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய் ஊழலற்ற நிர்வாகத்தை வலியுறுத்தி வருவதால், அந்தக் கொள்கையின் அடிப்படையிலேயே இந்த விவகாரத்தை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றதாகவும், கட்சிக்கு எதிராக எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்றும் அவர் கூறினார். இந்த விவகாரம் குறித்து CBI விசாரணை நடத்தி, குற்றச்சாட்டுகள் உண்மையென நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தனது கோரிக்கை என்றும் ஞானசௌந்தரி கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+