RBI Job: ரிசர்வ் வங்கியில் வேலை.. 650 உதவியாளர் பணியிடங்கள்! போட்டி தேர்வர்களுக்கு சூப்பர் வாய்ப்பு
சென்னை: ரிசர்வ் வன்கியில் (RBI Job) 650 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.58,514 சம்பளம் வழங்கப்படும்.
இந்தியாவில் உள்ள வங்கிகளின் வங்கியாக செயல்படுவது ரிசர்வ் வங்கி. மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ரிசர்வ் வங்கி நாட்டின் அன்னிய செலவாணியை பராமரிப்பது, பணக்கொள்கை வகுப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுகிறது.

ரிசர்வ் வங்கியில் வேலை (RBI Job):
மும்பையை தலைமையிடமாக கொண்ட இந்த வங்கிக்கு தமிழகத்தின் சென்னை உள்பட நாடு முழுவதும் முக்கிய பகுதிகளில் உள்ளது. இந்த வங்கியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பல ஆயிரங்களில் சம்பளம்,சலுகைகள் உள்ளிட்டவை கிடைக்கும்.
இதனால், போட்டி தேர்வர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் தேர்வு அறிவிப்புகளில் ஒன்றாக ரிசர்வ் வங்கி வெளியிடும் அறிவிப்பு உள்ளது. அந்த வகையில், ரிசர்வ் வங்கியில் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி என்ன? என்பது பற்றி பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
உதவியாளர் - 650 பதவிகள்
மண்டல வாரியான காலியிடங்கள்;
* அகமதாபாத் - 20
* பெங்களூரு - 24
* போபால் - 30
* புவனேஸ்வர் - 18
* சண்டிகர் - 20
* சென்னை - 53
* கவுகாத்தி - 36
* ஹைதராபாத் - 11
* ஜெய்ப்பூர் - 11
* ஜம்மு - 10
* கான்பூர் & லக்னோ - 50
* கொல்கத்தா - 29
* மும்பை - 249
* நாக்பூர் - 17
* டெல்லி - 49
* பாட்னா - 17
* திருவனந்தபுரம் - 06
கல்வித் தகுதி:
01.02.2026 தேதிப்படி அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்று இருக்க வேண்டும். வயது வரம்பை பொறுத்தவரை 20 வயது முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அதாவது விண்ணப்பதாரர்கள் 02/02/1998 க்கு முன்பாகவோ, 01/02/2006- க்கு பிறகோ பிறந்தவராக இருக்கக் கூடாது. அரசு விதிமுறைகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படுகிறது.
வயது வரம்பு தளர்வுகள்;
SC/ST விண்ணப்பதாரர்களுக்கு கூடுதலாக 5 ஆண்டுகள்
OBC விண்ணப்பதாரர்களுக்கு +3 ஆண்டுகள்
PwBD (பொது/ EWS) விண்ணப்பதாரர்களுக்கு +10 ஆண்டுகள்
PwBD (SC/ST) விண்ணப்பதாரர்களுக்கு +15 ஆண்டுகள்
PwBD (OBC) விண்ணப்பதாரர்களுக்கு +13 ஆண்டுகள்
அதாவது 28 வயது பொதுப்பிரிவினருக்கான வயது உச்ச வரம்பு ஆகும். எஸ்சி/எஸ்டி பிரிவினர் என்றால் 33 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் எவ்வளவு:
மாதம் ரூ.58,514 வழங்கப்படும். தேர்வு முறையை பொறுத்தவரை முதல் நிலைத்தேர்வு, மெயின் தேர்வு உள்ளூர் மொழித்திறன் தேர்வு என மூன்று கட்ட தேர்வுகள் நடைபெறும். விண்ணப்பிக்கும் மாநிலத்தின் உள்ளூர் மொழி தெரிந்து இருக்க வேண்டும்.
தேர்வு முறை:
முதல் நிலைத்தேர்வு நிலைத் தேர்வு,
ஆங்கில மொழி - வினாக்கள்: 30, அதிகபட்ச மதிப்பெண்கள்: 30, நேரம்: 20 நிமிடங்கள்
எண்ணியல் திறன் - வினாக்கள்: 35, அதிகபட்ச மதிப்பெண்கள்: 35, நேரம்: 20 நிமிடங்கள்
தர்க்கத் திறன் (Reasoning Ability) - வினாக்கள்: 35, அதிகபட்ச மதிப்பெண்கள்: 35, நேரம்: 20 நிமிடங்கள்
முதன்மைத் தேர்வு (பல்வேறு தேர்வு வினாக்கள்):
ரீசனிங் - வினாக்கள்: 40, அதிகபட்ச மதிப்பெண்கள்: 40, நேரம்: 30 நிமிடங்கள்
ஆங்கில மொழி - வினாக்கள்: 40, அதிகபட்ச மதிப்பெண்கள்: 40, நேரம்: 30 நிமிடங்கள்
எண்ணியல் திறன் - வினாக்கள்: 40, அதிகபட்ச மதிப்பெண்கள்: 40, நேரம்: 30 நிமிடங்கள்
பொது அறிவு - வினாக்கள்: 40, அதிகபட்ச மதிப்பெண்கள்: 40, நேரம்: 25 நிமிடங்கள்
கணினி அறிவு - வினாக்கள்: 40, அதிகபட்ச மதிப்பெண்கள்: 40, நேரம்: 20 நிமிடங்கள்
இந்த இரண்டு கட்ட தேர்வுமே ஆன்லைனில்தான் நடைபெறும்.
தேர்வு மையங்கள்:
முதல்நிலைத் தேர்வு: சென்னை, கோவை, மதுரை, நாமக்கல், சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், ஈரோடு, விருதுநகர், நாகர்கோவில்/ கன்னியாகுமரி, திருவண்ணாமலை, திருப்பூர், தஞ்சாவூர் & புதுச்சேரி
முதன்மைத் தேர்வு: சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, வேலூர், சேலம், புதுச்சேரி
விண்ணப்பிப்பது எப்படி?
தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் ரூ.450 ஆகும். எஸ்சி/எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.50 கட்டணம் ஆகும்.
முக்கியமான தேதிகள்;
* விண்ணப்பம் அவகாசம் தொடங்கிய தேதி: 16.02.2026
* விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.03.2026
* முதல்நிலைத் தேர்வு தேதி: 11 ஏப்ரல் 2026 (தற்காலிகமானது)
* முதன்மைத் தேர்வு தேதி: 07 ஜூன் 2026 (தற்காலிகமானது)
தேர்வு அறிவிப்பினை படிக்க: Click Here












Click it and Unblock the Notifications