RBI Job: ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. மாதம் 47 ஆயிரம் சம்பளம்.. டிப்ளமோ, பிஇ முடிச்சவங்களுக்கு செம சான்ஸ்
சென்னை: இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) இளநிலை பொறியாளர் பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 11 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. டிப்ளமோ மற்றும் பி.இ முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். சம்பளத்தை பொறுத்தவரை மாதம் ரூ.47 ஆயிரம் வழங்கப்படும். இதற்கு எப்படி விண்ணப்பிப்பது உள்ளிட்ட விவரங்களை இங்கு காணலாம்.
ஆர்பிஐ எனப்படும் ரிசர்வ் வங்கி, இந்தியாவின் மைய வங்கியாக உள்ளது. நாணய கொள்கை வகுப்பது நட்டின் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது என வங்கிகளுக்கு எல்லாம் வங்கியாக ரிசர்வ் வங்கி செயல்படுகிறது. மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படுவதால் ரிசர்வ் வங்கியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கை நிறைய சம்பளம், சலுகைகள் கிடைக்கும்.

ரிசர்வ் வங்கியில் வேலை கிடைக்காதா என ஏங்கும் இளைஞர்களுக்கு வாய்ப்பாக தற்போது 11 ஜூனியர் என்ஜினியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதாவது இளநிலை பொறியாளர் (சிவில்) பிரிவில் 7 இடங்களும், இளநிலை பொறியாளர் (எலெக்ட்ரிக்கல்) பிரிவில் 4 இடங்களும் நிரப்பப்பட உள்ளது.
கல்வித் தகுதி, அனுபவம்:
இளநிலை பொறியாளர் (சிவில்):
இளநிலை பொறியாளர் (சிவில்) பதவிக்கு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ அவசியம். குறைந்தபட்சம் 65% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். SC/ST/PwBD பிரிவினருக்கு 55% மதிப்பெண்கள் போதுமானது. சிவில் இன்ஜினியரிங் பட்டப்படிப்பு இருந்தால் 55% மதிப்பெண்கள் போதும். SC/ST/PwBD பிரிவினர் 45% பெற்றால் விண்ணப்பிக்கலாம்.
டிப்ளமோ படித்தவர்களுக்கு 2 வருட சிவில் கட்டுமான அனுபவம் வேண்டும். கட்டுமானப் பணிகளை மேற்பார்வையிட்டிருக்க வேண்டும். பட்டதாரிகளுக்கு 1 வருட அனுபவம் மட்டும் போதும். RCC வடிவமைப்பு, கணினி அறிவு முக்கியம். டெண்டர் தயாரிப்பு அனுபவம் அல்லது பொதுத்துறை நிறுவன பயிற்சி அவசியம்.
இளநிலை பொறியாளர் (எலெக்ட்ரிக்கல்):
இளநிலை பொறியாளர் (எலெக்ட்ரிக்கல்) பதவிக்கு எலெக்ட்ரிக்கல் அல்லது எலெக்ட்ரானிக்ஸ் டிப்ளமோ அவசியம். மூன்று வருட படிப்பு அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும். 65% மதிப்பெண்கள் பொதுப் பிரிவினருக்கு தேவை. SC/ST/PwBD பிரிவினர் 55% பெற்றால் போதும். பட்டப்படிப்பு முடித்தவர்கள் 55% மதிப்பெண் பெற வேண்டும். SC/ST/PwBD பிரிவுக்கு 45% மதிப்பெண் போதுமானதாகும்.
எலெக்ட்ரிக்கல் பிரிவினருக்கான அனுபவமும் ஏப்ரல் 1, 2026 அன்று கணக்கிடப்படும். டிப்ளமோதாரர்களுக்கு 2 வருட அனுபவம் அவசியம். HT/LT துணை மின் நிலையப் பணிகளில் அனுபவம் தேவை. AC, லிஃப்ட், UPS, DG, CCTV, தீ அபாய அமைப்புகள் மேற்பார்வையிட்டு இருக்கலாம். பட்டதாரிகளுக்கு 1 வருட அனுபவம் அல்லது பயிற்சி அவசியம். பொதுத்துறை நிறுவனத்தில் ஒரு வருட பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
வயது வரம்பை பொறுத்தவரை விண்ணப்பதாரர்கள் 20 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். ஏப்ரல் 02, 1996-க்கு முன் மற்றும் ஏப்ரல் 01, 2006க்கு பின் பிறந்தவர்கள் தகுதியற்றவர்கள் ஆவர். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். பொதுப் பிரிவினருக்கு 10 ஆண்டுகள், OBCக்கு 13 ஆண்டுகள், SC/STக்கு 15 ஆண்டுகள் வரை தளர்வுகள் அளிக்கப்படும்.
சம்பளம் எவ்வளவு
சம்பளத்தை பொறுத்தவரை மாதம் ரூ.47,700 வழங்கப்படும். இது தவிர, இந்திய ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி பல சலுகைகள் உண்டு. பணிக்கான பிற பலன்களும் வழங்கப்படும்.
தேர்வு முறை, விண்ணப்பக் கட்டணம்
எழுத்து தேர்வு, மொழித்திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு ஆன்லைன் மூலமாக நடக்கும். உள்ளூர் மொழி தெரிந்து இருப்பது அவசியம் ஆகும். தமிழகத்தில், சென்னை மற்றும் மதுரை ஆகிய இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம் SC/ST, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகளுக்கு கிடையாது. மற்ற விண்ணப்பதாரர்கள் ரூபாய் 600/- செலுத்த வேண்டும். இந்தக் கட்டணம் ஆன்லைன் மூலமாக மட்டுமே ஏற்கப்படும். தகுதியும், ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஏப்ரல் 16, 2026 முதல் மே 06, 2026 வரை விண்ணப்பிக்கலாம். https://opportunities.rbi.org.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பினை படிக்க:
https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/RPJECE160420260B367DB080134796AC32C86A34068176.PDF
-
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications