கைநிறைய சம்பளம்.. இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு! வெளியான அறிவிப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?
டெல்லி: இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) முழுநேர ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற கிரேடு 'சி', 'டி' மற்றும் 'இ' பிரிவுகளில் மொத்தம் 93 காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை இந்திய ரிசர்வ் வங்கி சேவை வாரியம் வெளியிட்டுள்ளது. தகுதி உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 6.1.2026 என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைவாய்ப்புகள் முக்கியமாக தகவல் தொழில்நுட்பம், ரிஸ்க் மேனேஜ்மெண்ட், கணக்கியல் மற்றும் வங்கி மேற்பார்வை போன்ற துறைகளில் உள்ளன. Data Scientist, Data Engineer, Cyber Security Analyst, IT System Administrator, Project Manager, Market Risk Specialist போன்ற பணியிடங்கள் இதில் அடங்கும்.

இந்திய ரிசர்வ் வங்கி சேவைகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, Department of Information Technology (DIT), Premises Department மற்றும் Department of Supervision (DoS) ஆகிய துறைகளில் இந்த நியமனங்கள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு துறையிலும் பல்வேறு சிறப்பு பிரிவுகளுக்கான பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தகவல் தொழில்நுட்பத்துடன் தொடர்புடைய பணியிடங்கள் அதிக அளவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியான பொறுப்புகள் இருக்கும். குறிப்பாக AI/ML Specialist, Cyber Security Analyst, Risk Analyst, Banking Domain Specialist, Data Analyst, Bank Examiner போன்ற பணியிடங்கள் வங்கியின் முக்கிய செயல்பாடுகளில் நேரடியாக ஈடுபடும் பணிகளாகும்.
யார் விண்ணப்பிக்கலாம்?
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், பொறியியல் துறை அல்லது தொடர்புடைய துறையில் B.E., B.Tech., B.Sc., M.Sc., M.A. அல்லது CA போன்ற கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும். மேலும், தொடர்புடைய துறையில் பணி அனுபவமும் அவசியமாகும். அனுபவம் இல்லாமல் விண்ணப்பிக்க முடியாது.
வயது வரம்பு
6.1.2026 தேதியின்படி, பதவியின் தன்மையைப் பொறுத்து 27 முதல் 40 வயது வரை அல்லது 30 முதல் 45 வயது வரை இருக்க வேண்டும். ஒவ்வொரு பதவிக்கும் வயது வரம்பு மாறுபடும்.
எப்படி தேர்வு செய்வார்கள்?
விண்ணப்பித்தவர்களில் தகுதி பெற்றவர்கள், எழுத்துத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வு, மூலம் இறுதியாக தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பம் www.rbi.org.in இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்
பொது விண்ணப்பதாரர்களுக்கு ரூ.600. SC/ST விண்ணப்பதாரர்களுக்கு ரூ.100. கட்டணம் ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
கடைசி தேதி
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 6.1.2026. மேலும் முழுமையான விவரங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://opportunities.rbi.org.in/Scripts/bs_viewcontent.aspx?Id=4799 என்ற லிங்கில் பார்க்கலாம்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications