சம்பளமே வேண்டாம்.. எப்படியாவது வேலை மட்டும் தாங்க.. பெங்களூர் ஐடி ஊழியரின் கலங்க வைக்கும் பதிவு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கல்லூரி படிப்பை முடித்து 2 நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் பணி செய்தும் பிற நிறுவனங்களில் வேலை கிடைக்காத விரக்தியில் பெங்களூர் சாப்ட்வேர் இன்ஜினியர் போட்ட பதிவு தற்போது அனைவரையும் கலங்க வைத்துள்ளது. இந்த பதிவை பார்த்தவர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

தற்போது பலரும் தங்கள் நிறுவனங்களில் நிலவும் பிரச்சனைகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக ரெடிட் இணையதளத்தில் ஒவ்வொருவரும் பணியிடங்களில் தாங்கள் எதிர்கொண்ட சூழல்கள் பற்றிய பதிவுகளை அதிகமாக பதிவு செய்து வருகின்றனர்.

it jobs jobs bangalore

அந்த வகையில் தான் தற்போது பெங்களூரை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் போட்ட பதிவு அவரையும் கலங்க வைத்துள்ளார். வேலை கிடைக்காத விரக்தியில் உள்ள அவர் ‛‛எனக்கு சம்பளம் கூட வேண்டாம். ஓசியில் பணி செய்கிறேன். ஆனால் வேலை மட்டும் தாருங்கள்'' என்று பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: நான் கல்லூரி படிப்பை முடித்துள்ளேன். இன்பர்மேஷன் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங் பிரிவில் பிஇ படிப்பை முடித்துள்ளேன். பைத்தான், ஜாவா நன்றாக தெரியும். அதுமட்டுமின்றி DevOps, Cloud Computing, மெஷின் லேனிங் தெரியும். யூசர் பிரண்ட்லி செயலி உருவாக்க தெரியும்.

அதேபோல் சவாலான பிரச்சனைகளை சுமூகமாக முடிக்க தெரியும். சாப்ட்வேர் டெவலமென்ட்டுக்கான புதிய ஐடியாக்களை என்னால் கொடுக்க முடியும். 2 நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் பணி அனுபவம் உள்ளது. புராடெக்ட் இன்டர்ன் மற்றும் டெக்னிக்கல் இன்டர்னாக பணியாற்றி உள்ளேன். ஏபிஐ டெஸ்ட்டிங், வெப் கிராவளர்ஸ், எம்எல் சிஸ்டமில் பணியாற்றி உள்ளனே். ஆண்ட்ராய்டு டெவலப்மென்ட் தொடர்பாக ஐஇஇஇ-யில் ரிசர்ச் பேப்பர் பப்ளிஷ் செய்துள்ளேன்.

ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக எனக்கு முழுநேர பணி என்பது கிடைக்கவில்லை. இதனால் சம்பளம் இன்றி கூட ஓசியில் பணி செய்ய தயாராக இருக்கிறேன். வீட்டில் இருந்தே பணியாற்றும் வகையில் வேலை மட்டும் தந்தால் போதும். சம்பளம் கூட தேவையில்லை''என்று கூறியுள்ளார். அதோடு அந்த பதிவில் தனது திறமைகளை உள்ளடக்கிய ரெஸ்யூமை பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவை பார்க்கும் பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். தொடர்ந்து முயற்சித்தால் பணி கிடைக்கும். மனவலிமையை விட்டு விட வேண்டாம். இன்றைய உலகம் மிகப்பெரியது. நிச்சயம் பணி கிடைக்கும் என்று கூறி வருகின்றனர். அதேவேளையில் இன்னும் சிலரோ, ‛‛என் நிலைமையும் அதுதான்'' என்று திறமை இருந்தும் கஷ்டப்படுவதாக புலம்பி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+