MS office தெரியுமா? வீட்டில் இருந்தே வேலை செய்யலாம்.. பிரபல நிறுவனம் தரும் அசத்தலான வாய்ப்பு
சென்னை: அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்தே வேலை செய்யும் வகையில் பிரபல நிறுவனம் ஒன்று வாய்ப்பு வழங்கி உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்து பயன்பெறலாம்.
Real என்பது ரியல் எஸ்டேட் துறையில் செயல்பட்டு வரும் முன்னணி நிறுவனமாகும். இந்த நிறுவனம் அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு ரியல் எஸ்டேட் கஸ்டமர்களுக்கு தேவையான சேவைகளை வழங்கி வருகிறது.

இந்நிலையில் தான் இந்த நிறுவனத்தில் இருந்து வீட்டில் இருந்தே பணியாற்றுவதற்கு தேவையான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன் விபரம் வருமாறு:
தற்போதைய அறிவிப்பின்படி ரியல் நிறுவனத்தில் கஸ்டமர் சப்போர்ட் எக்ஸிக்கியூட்டிவ் (Customer Support Executive) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். விண்ணப்பம் செய்வோருக்கு MS Office, G-Suite, ZenDesk, Slack மற்றும் Zoom தெரிந்திருக்க வேண்டும்.
அதேபோல் கஸ்டமர் சப்போர்ட் ரோலில் பணியாற்றியவர்கள் என்றால் அது விண்ணப்பம் செய்வோருக்கு பிளஸ் பாயிண்ட்டாகும். ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழதவும் தெரிந்திருக்க வேண்டும். ஸ்ட்ராங்க் டீம்வொர்க் மற்றும் மோட்டிமேஷனல் ஸ்கில் இருக்க வேண்டும். அதோடு புதிய டெக்னாலஜியை கற்கும் ஆர்வம் இருக்க வேண்டும்.
மேலும் பிரச்சனைகளை தீர்க்கும் திறன் இருக்க வேண்டும். திறமையை பொறுத்து சம்பளம் என்பது வழங்கப்பட உள்ளது.இது ஒரு முழுநேர பணியாகும். ஷிப்ட் அடிப்படையில் பணி என்பது இருக்கும். அந்த வகையில் முதல் ஷிப்ட் என்பது மாலை 6.30 மணி முதல் அதிகாலை 3.30 மணி வரை இருக்கும். 2வது ஷிப்ட் என்பது இரவு 7.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை இருக்கும்.
பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஏனென்றால் விண்ணப்ப தேதி எப்போது வேண்டுமானாலும் முடிவுக்கு வரலாம். இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications