சென்னையில் ஐடி வேலை.. அழைக்கும் பிரபல நிறுவனம்.. விண்ணப்பம் செய்வது எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பெருங்குடியில் உள்ள நிறுவனத்தில் சீனியர் சாப்ட்வேர் இன்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.

Recro.. என்பது டெவலப்பர் சார்ந்த பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவனம் என்பது AI தயாரிப்புகள் மூலம் நிதித் துறைகளுக்கு உதவுவதில் கவனம் செலுத்தி வருகிறது.

it jobs job jobs

இந்நிலையில் தான் சென்னை பெருங்குடியில் உள்ள நிறுவனத்தில் பணியாற்ற தேவையான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன் விபரம் வருமாறு:

தற்போதைய அறிவிப்பின்படி சீனியர் சாப்ட்வேர் இன்ஜினியர் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் இளங்கலை பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் டிகிரி அல்லது இன்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் தொடர்புடைய பிரிவில் கல்லூரி படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் 6 முதல் 8 ஆண்டுகள் வரை ஜாவா டெவலப்மென்ட் பணியில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். குறிப்பாக Saas அல்லது டெக்னாலஜி செக்டாரியில் இருந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

மேலும் ஜாவா பற்றிய தெளிவான அறிவு பெற்றிருக்க வேண்டும். இதுதவிர ஜாவா ப்ரேம்வொர்க்ஸில் ஸ்பிரிங் (Spring), Hibernate, JPA உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். மேலும் MySQL, PostgresSQL மற்றும் SQl உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். RESTful APIs பற்றிய புரிதல் இருக்க வேண்டும். அதுமட்டுமின்றி AWS Cloud Services-களில் EC2, S3, RDS, Lambda, CloudForamation உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

அதோடு HTML, CSS, Javascript, ப்ரேம்வொர்க்ஸை பொறுத்தமட்டில் Angular அல்லது React தெரிந்திருந்தால் அது விண்ணப்பத்தாரர்களுக்கு பிளஸ் பாயிண்டாக இருக்கும். மேலும் ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும் தெரிந்திருப்பதோடு, பிரச்சனைகளை தீர்க்கும் திறன் கொண்டிருக்க வேண்டும்.

தற்போதைய பணிக்கான மாதசம்பளம் குறித்த விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு கடைசி கட்ட இன்டர்வியூவின்போது அதுபற்றிய விபரம் தெரிவிக்கப்படும். தேர்வாகும் நபர்கள் சென்னை பெருங்குடியில் உள்ள நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள லிங்க் இணைப்பு மூலம் விண்ணப்பம்செய்து கொள்ளலாம். விண்ணப்பத்துக்கான கடைசி தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதனால் முடிந்தவரை சீக்கிரமாக விண்ணப்பம் செய்வது நல்லது.

பணி தொடர்பான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+