விமான நிலைய ஆணையத்தில் பணி.. மாதம் பொறந்தா ரூ ஒன்றரை லட்சம் வரை ஊதியம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய விமான நிலைய ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகப்பட்டுள்ளன. மொத்தம் 368 காலிபணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

இந்திய அரசின் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய விமான நிலைய ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Recruitment for the post of Managers and Junior Executives in AAI

இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி மேனேஜர் மற்றும் ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் ஆகிய பணிகளை நிரப்ப மொத்தம் 368 இடங்கள் நிரப்பப்படவுள்ளன. எனவே இதற்கு கல்வியும் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தகுதி பெற்றவர்கள் டிசம்பர் 15-ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி வரை தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இதற்காக கல்வித் தகுதி மற்றும் வயது தகுதியை பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

அதே போல் விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பிற்கு ஆன்லைன் மூலம் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல், மருத்துவப் பரிசோதனை, வாகன இயக்கும் பரிசோதனை, குரல் சோதனை உள்ளிட்டவை மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு செய்யப்படுவோர் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணியமர்த்தப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு www.aai.aero என்ற இணையதளத்தை அணுகி அதில் career என்பதில் DIRECT RECRUITMENT FOR THE POST OF MANAGERS AND JUNIOR EXECUTIVES IN VARIOUS DISCIPLINES- ADVERTISEMENT No 05/2020 என்ற அறிவிப்பை தேர்வு செய்ய வேண்டும். ஊதியமாக ரூ 40 ஆயிரம் முதல் 1,80,000 வரை வழங்கப்படுகிறது. பிஇ, பிடெக், டிகிரி, பிஎஸ்சி, எம்பிஏ ஆகிய பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மேனேஜர் பணிக்கு 32 வயதுக்குள் இருக்க வேண்டும், ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணிக்கு 27 வயதிற்குள் இருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ 1000 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, பெண்களுக்கு வெறும் 170 ரூ மட்டுமே விண்ணப்ப கட்டணம். மாற்றுத் திறனாளிகள், இந்திய விமான நிலையத்தில் அப்ரன்டீஸ் முடித்தவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+