மத்திய அரசு வேலை.. பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.. கை நிறைய சம்பளம்.. விண்ணப்பிக்க ரெடியா?
சென்னை: இந்திய தர கவுன்சிலான கியூசிஐ-வில் காலியாக உள்ள 553 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி, தேர்வு நடைபெறும் தேதி உள்ளிட்ட விரிவான விவரங்களை இங்கே பார்க்கலாம்.
இந்திய தர கவுன்சில் (கியூசிஐ) மூலம் காப்புரிமை, வடிவமைப்பு குழு சார்ந்த பதவிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 553 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

கல்வித்தகுதி: பி.இ., பி.டெக்., எம்.இ., எம்.டெக்., எம்.எஸ்சி., பயோ டெக்னாலஜி, பயோ கெமிஸ்ட்ரி, புட் என்ஜினியரிங் உள்ளிட்ட பட்ட படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப்பணியிடங்களுக்கு தேவையான துறை சார்ந்த பட்டப்படிப்பு விவரம் தேர்வு அறிவிப்பில் விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது. அதில் தேர்வர்கள் தெரிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு: 4-8-2023 அன்றைய தேதிப்படி 21 முதல் 35 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு. முதல் நிலைத்தேர்வு, மெயின் தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி: ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். https://qcin.org/ என்ற இணையதளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
சம்பளம் விவரம்: சம்பளத்தை பொறுத்தவரை ரூ.56,100 முதல் 1 லட்சத்து 77 ஆயிரத்து 500 வரை கிடைக்க வாய்ப்புள்ளது. காலிப்பணியிடங்கள் உத்தேச எண்ணிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளது. காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை கூடவோ குறையவோ செய்யலாம் என்று கியூசிஐ தெரிவித்துள்ளது.
விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப கட்டணமாக ரூ. 1000 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் மாற்றுத்திறனாளிகள், பெண்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ 500 செலுத்தினால் போதும். தேர்வுகள் அனைத்தும் ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெறும். முதன்மை தேர்வு ஆன்லைன் மூலமாகவும் மெயின்ஸ் தேர்வு ஆஃப்லைன் முறையிலும் நடைபெறும். மெயின்ஸ் தேர்வு விவரித்து எழுதக் கூடிய வகையில் இருக்கும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: கடந்த 14 ஆம் தேதி முதல் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் தொடங்கியது. விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 4 ஆம் தேதி ஆகும். முதல் நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியிடப்படும். முதல் நிலைத் தேர்வு செப்டம்பர் 3 ஆம் தேதி நடைபெறும். மெயின் தேர்வு அக்டோபர் 1 ஆம் தேதி நடைபெறும். மெயின் தேர்வு முடிவுகள் அக்டோபர் 16 ஆம் தேதி வெளியாகும். நேர்முகத்தேர்வு நவம்பர் 11 மற்றும் 12 ஆம் தேதி நடைபெறும்.
தேர்வு குறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் https://qcin.org/wp-content/uploads/2023/07/Recruitment-Notification_Final-_-30062023-1.pdf செய்யவும்.
-
திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலை.. 27,000 சம்பளம்.. 8ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications