ஜப்பானில் பேய் பங்களாவில் ஒரு நாள் தங்கிவிட்டு வந்தால் 52000 சம்பளம்.. முழு விவரம்
டோக்கியோ: ஜப்பானில் பேய் இருப்பதாக மக்களால் நம்பப்படும் வீடுகளில் ஒரு நாள் இரவு தங்கிவிட்டு வந்து மறுநாள் காலையில் வந்தால், அவர்களுக்கு இந்திய மதிப்பில் 52000 சம்பளம் வழங்கப்பபடும். ஒரு நாள் இரவு வேலைக்கு, 52000 சம்பளம் வழங்கியதாவது பேய் இல்லை என்று நிரூபித்து ரியல் எஸ்டேட் துறையில் எப்படியாவது வீடுகளை விற்க வேண்டும் என்று ஜப்பானில் பலர் இருக்கிறார்கள். பேய் இல்லை என்பதை நிரூபித்தால் தான் வீடுகளை வாங்க மக்கள் முன் வருகிறார்கள் என்பது தான் ஹெலைட்.
ஜப்பானின் விசித்திரமான "பேய் ஆய்வு" வேலை பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. பேய்கள் நடமாட்டம் இலை. அசாதாரண நிகழ்வுகள் எதுவும் இல்லை என்பதை நிரூபிப்பதற்காக, 'பேய் வீடுகள்' என்று கூறப்படும் வீடுகளுக்குள் ஒரு இரவு முழுவதும் தங்குவகாகவே நிபுணர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள். ஒரு வீட்டிற்கு 88,000 யென் சேவை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கடந்த காலத்தில் வீடுகளில் திடீரென கொலை அல்லது தற்கொலை நடந்தது காரணமாகப் பயன்படுத்தப்படாமல் கைவிடப்பட்ட வீடுகளை விற்பதற்கும், வாடகைக்கு விடுவதற்கும் பேய் இல்லை என்பதை நிரூபிக்க இந்த சேவையை மக்கள் பயன்படுத்துகிறார்கள்.

ஜப்பான் முழுவதும் உள்ள "ஜிகோ புக்கென்" அல்லது அபசகுனமான/பாதிக்கப்பட்ட சொத்துக்கள் ஆயிரக்கணக்கில் காலியாகவே கிடக்கிறது. யாராவது ஒருவர் தூக்குப்போட்டு அல்லது வேறு வகையில் உயிரை மாய்த்துக்கொண்டார் ன்ற காரணத்தால் பலரும் அந்த வீடுகளை வாங்கவோ வாடகைக்கு எடுக்கவோ மறுப்பதால் இந்த வணிகம் உருவெடுத்திருக்கிறது.
ஜப்பானில் 'ஜிகோ புக்கென்' என்றால் என்ன
தற்கொலை, கொலை, தீ விபத்து அல்லது ஜப்பானிய மொழியில் "தனிமையான மரணம்" எனக் கூறப்படும் முதியவர்கள் தனியாக இறந்து யாருக்கும் தெரியாமல் கிடப்பது போன்றவை நிகழ்ந்த வீடுகளே "ஜிகோ புக்கென்" என்று அழைக்கிறார்கள். யோகோஹாமாவில் உள்ள இரண்டு அடுக்கு மாடி வீடு ஒன்று குறைந்தது ஐந்து ஆண்டுகளாகக் காலியாகக் கிடப்பதாக சொல்லப்படுகிறது. அந்த வீட்டை ஒரு வசதியான வீடாக புதுப்பிக்க முடியும் என்றாலும், அதன் கடந்த கால வரலாறு காரணமாக வாங்க வரும் வாடிக்கையாளர்களை ஈர்ப்பது கடினமாக இருந்தது வந்தது.
'காச்சிமோடே' என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் தலைவரான கஸுதோஷி கொடாமா கூறுகையில், பல ஜப்பானியர்கள் மரணத்தை அசுத்தமாகவும் துரதிர்ஷ்டமாகவும் கருதுகிறார்கள். "மரணம் என்பது அசுத்தம் மற்றும் துரதிர்ஷ்டத்திற்குச் சமமானது என்று நம்புகிறார்கள். இதன் காரணமாகவே பலரும் இத்தகைய வீடுகளை வாங்குவது அல்லது வாடகைக்கு எடுப்பது ஒருபுறமிருக்க, வந்து பார்க்கக்கூடத் தயங்குகிறார்கள்.
52000 சம்பளம் ஆய்வு ஏன்
வீட்டின் உரிமையாளர்கள் இந்தப் பயத்தைப் போக்க உதவுவதற்காக, 'காச்சிமோடே' நிறுவனம் "பேய் ஆய்வு" என்ற சேவையை வழங்கி வருகிறது. ஆய்வாளர்கள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை வீட்டிற்குள் தங்கியிருந்து, வீடியோ கேமராக்கள், ஆடியோ ரெக்கார்டர்கள், தெர்மோகிராபி கருவிகள், மின்காந்த அலை கண்டறியும் கருவிகள் மற்றும் அறையின் வெப்பநிலை, ஈரப்பதம், வளிமண்டல அழுத்தம் மற்றும் சத்தத்தின் அளவைக் கண்காணிக்கும் சென்சார்களைப் பயன்படுத்துகிறார்கள். இரவு முழுவதும் தங்கிய பிறகு வீடு முழுமையாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்துவதும், பேய்கள், விசித்திரமான ஆவிகளின் நடமாட்டம் அல்லது விளக்கிச் சொல்ல முடியாத பிற அசாதாரண நிகழ்வுகள் ஏதேனும் இருக்கிறதா என்பதைக் கண்டறிகிறார்கள்.
இரவு நேரப் பரிசோதனைக்குப் பிறகு அந்த நிறுவனம் விரிவான அறிக்கை ஒன்றை வழங்குகிறது. இந்த ஆய்வு அறிக்கையை வாங்க 52000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வீட்டை வாங்க அல்லது வாடகைக்கு எடுக்க நினைப்பவர்களிடம், அங்கு எந்த "கெட்ட ஆவிகளும்" இல்லை என்பதற்கான ஆதாரமாக ரியல் எஸ்டேட் முகவர்கள் இந்த அறிக்கையைப் பகிருகிறார்கள் . நாங்கள் இயற்கைக் கடந்த நிகழ்வுகளைக் கண்காணிப்பதில் நிபுணத்துவம் பெற்ற ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியருடன் இணைந்து பணியாற்றுகிறோம். இந்தச் சேவை ஜப்பானிலேயே மிகவும் தனித்துவமான ஒன்றாகும்.
பேய் நடமாட்டத்தைக் கண்டறிந்துள்ளார்களா?
வீடியோ கேமராக்கள் எதிர்பாராதவிதமாக நின்று போவது, மைக்கைரோஃபோன்கள் வேலை செய்யாமல் போவது போன்ற சில விசித்திரமான சம்பவங்கள் எஙகளுக்கு எப்போதாவது நடந்துள்ளது. என்பதை ஒப்புக்கொள்கிறேன். எனினும், பெரும்பாலான வீடுகளில், அசாதாரண நிகழ்வுகள் என்று சொல்லப்படுபவை மீண்டும் மீண்டும் நடப்பதில்லை என்றும், அவை ஏதோ ஒரு முறை தற்செயலாக நடந்த தனிப்பட்ட நிகழ்வாகவே ஒதுக்கித் தள்ளிவிடுவோம்.
அதேவேளையில், சில வீடுகளில் விளக்கிச் சொல்ல முடியாத சம்பவங்கள் நீண்ட காலத்திற்குத் தொடர்கிறது, இதனால் அந்த வீடுகளை வாடகைக்கு விடுவதோ அல்லது விற்பதோ மிகவும் கடினமாக உள்ளது என்றார்.
ஜப்பானில் பேய் வீடுகள் ஏன் மிகக் குறைந்த விலைக்கு விற்கப்படுகின்றன?
ஜப்பானிய சட்டப்படி, ரியல் எஸ்டேட் முகவர்கள் பாதிக்கப்பட்ட சொத்துக்களின் கடந்த கால வரலாற்றை வாங்க அல்லது வாடகைக்கு எடுக்க விரும்புபவர்களிடம் கட்டாயம் தெரிவிக்க வேண்டும். இத்தகைய வீடுகளின் இருப்பிடப் பட்டியல் மற்றும் அவை ஏன் அந்தப் பட்டியலிடப்பட்டன என்பதற்கான காரணங்களை விளக்கும் பிரத்யேக இணையதளங்கள் கூட இருக்கிறது.
இதன் விளைவாக, நில உரிமையாளர்கள் பெரிய நகரங்களில் வாடகையை சுமார் 30% வரை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. சிறிய நகரங்களில் வாடகை 50% வரை குறைவாகவே விட வேண்டிய நிலை வருகிறது.. சில வீடுகள் 500 நாட்கள் வரை காலியாகவே கிடப்பது சாதாரணமான ஒன்று. எத்தனை முயற்சிகள் எடுத்தும் 1,000 நாட்களுக்கும் மேலாக சில வீடுகள் யாரும் வராமல் காலியாகவே இருக்கிறது.
ஜப்பானில் காலியாக உள்ள வீடுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் பேய் வீடு பிரச்சினை மிகவும் முக்கியமானதாக மாறி உள்ளது. 2024 ஆம் ஆண்டின் இறுதியில் நடத்தப்பட்ட ஜப்பான் அரசின் கணக்கெடுப்பின்படி, நாட்டில் 90 லட்சம் (9 million) காலிய வீடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இது நாட்டின் மொத்த குடியிருப்புச் சொத்துக்களில் 13.8% ஆகும். மக்கள் தொகை குறைவு, சொத்துப் பங்கீட்டுச் சிக்கல்கள் மற்றும் வயதான சமூகங்கள் ஆகியவை காரணம் என்றாலும், மரணம் குறித்த மூடநம்பிக்கையுடன் கூடிய கலாச்சார நம்பிக்கைகளும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
'அகியா மார்ட்' நிறுவனத்தின் இணை நிறுவனரான ஜோயி ஸ்டாக்கர்மேன் கூறுகையில், பல ஜப்பானியர்கள் யாராவது இறந்த வீடுகளில் வாழத் தயங்குகிறார்கள், மயானங்களுக்கு அருகில் அமைந்துள்ள வீடுகளையும் தவிர்க்கிறார்கள் என்றார். டோக்கியோ புறநகர்ப் பகுதியில் ஒரு கோடி வீட்டை பெறும் 5 லட்சத்திற்கு ஒருவர் வாங்கியிருக்கிறார். அவ்வளவு குறைந்த விலையாக இருந்தபோதிலும், இரண்டு வருடம் யாரும் வாங்காமல் காலியாகவே இருந்தது.நம்மூரில் தூக்குப்போட்ட வீடு, தீக்குளித்த வீட்டை யாருமே வாங்க மாட்டார்கள் அல்லவா, அப்படித்தான் ஜப்பானில் நடக்கிறது.
நம்மூரில் எப்படி பூசாரிகளை வைத்து பூஜை செய்வார்களோ, அதுபோல் வீட்டை வாங்குபவர்களுக்கு நம்பிக்கை அளிப்பதற்காக, 'அகியா மார்ட்' ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒரு புதிய திட்டத்தையும் வழங்குகிறது. இதில் வீட்டைச் சந்தைப்படுத்துவதற்கு முன், ஒரு ஷிண்டோ மதப் பூசாரி மூலம் பாரம்பரிய பரிகாரச் சடங்குகள் செய்து சுத்தம் செய்கிறது.
ஜப்பான் முழுவதும் லட்சக்கணக்கான காலிய வீடுகள் உள்ளதாலும், அந்த வீடுகளில் பல சோகமான கடந்த காலத்தைக் கொண்டிருக்கிறது. எனவே பேய் ஆய்வுச் சேவைகள் என்பது நாளுக்கு நாள் அதிக தேவையுள்ள ஒரு வணிகத் துறையாக மாறி இருக்கிறது. சொத்துக்களின் மீதான அபசகுனப் பெயர நீக்கி, அவற்றின் மதிப்பை மீட்க வீட்டின் உரிமையாளர்கள் தீவிரமாக விரும்புவதால், இந்தத் துறைக்கு வலுவான வளர்ச்சி சாத்தியம் இருக்கிறதாம். எனவே பேய் வீட்டில் ஒரு நாள் வசிக்க ரெடி என்றால் நிறுவனங்கள் உங்களுக்கு சம்பளத்தை அள்ளி அள்ளி வழங்குவார்கள்.


Click it and Unblock the Notifications
