ரெப்கோ ஹோம் பைனான்ஸில் வேலை வேண்டுமா? இங்கே பார்வையிடுங்க!
சென்னை: சென்னையை தலைமையிடமாகக் கொண்டு நாடு முழுவதும் செயல்பட்டு வரும் ரெப்கோ வீட்டு வசதி நிறுவனத்தின் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் உள்ள கிளைகளில் காலியாக உள்ள கிளார்க் பணியிடங்களை நிரப்ப தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர்: கிளெரிக்கல் கிரேடர் எம்ப்ளாயிஸ்
வயதுவரம்பு: 01.04.2015 தேதியின்படி 25க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: 50 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஆங்கிலம் மற்றும் சம்மந்தப்பட்ட மாநில மொழிகளில் சரளமாக பேச தெரிந்திருக்க வேண்டும். இந்தியில் ஓரளவு பேச தெரிந்திருப்பது கூடுதல் தகுதியாக கருதப்படும்.
சம்பள விகிதம்: நேரடியாக நியமனம் செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூபாய் 16,000 மற்றும் இதர சலுகைகள்.
பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்கப்படும். வெற்றிகரமாக பயிற்சியை முடிப்பவர்கள் காலியிடம் ஏற்படுவதைப் பொறுத்து நிரந்தர பணியில் அமர்த்தப்படுவர்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.05.2015
இதுபோன்ற மேலும் பல வேலைவாய்ப்புத் தகவல்களுக்கு எங்களின் http://jobs.oneindia.com/ இணையதளத்தினைப் பார்வையிடவும்.












Click it and Unblock the Notifications