வீட்டில் இருந்தே வேலை.. டிகிரி முடித்தோருக்கு சூப்பர் வாய்ப்பு.. அழைக்கும் Cognizant
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் காக்னிசண்ட் ஐடி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்யலாம்.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக காக்னிசண்ட் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் காக்னிசண்ட் நிறுவனம் இயங்கி வருகிறது.

இந்நிலையில் தான் காக்னிசண்ட் சார்பில் வீட்டில் இருந்தே பணியாற்றும் வகையில் புதிய வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வது எப்படி? யார் விண்ணப்பம் செய்யலாம்? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
தற்போதைய அறிவிப்பின்படி காக்னிசண்ட் நிறுவனத்தில் சீனியர் சாப்ட்வேர் இன்ஜினியர் பி2 (Senior Software Engineer B2) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டும். மேலும் விண்ணப்பத்தாரர்களுக்கு ஸ்பிரிங்புட் (Spring Boot), மைக்ரோசர்வீசஸ் (Microservices), ஜாவா (Java) உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும்.
அதேபோல் AWS, SQL, One$DB, Angular JS, JavaScript, MySQL உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி சம்பளம் குறித்த தகவல் அறிவிப்பில் இல்லை. திறமையை பொறுத்து சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்படலாம். அதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் Cognizant இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி இன்னும் குறிப்பிடவில்லை. இதனால் சீக்கிரமாக விண்ணப்பம் செய்யவும். ஏனென்றால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வர வாய்ப்புள்ளது.
மேலும் பணிக்கு தேர்வாகும் நபர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றலாம். பணி பற்றிய அப்டேட்களை சென்னை காக்னிசண்ட் நிறுவனத்தில் ரிப்போர்ட் செய்ய வேண்டி இருக்கும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications