வீட்டில் இருந்தே வேலை.. அழைக்கும் Amazon ஐடி நிறுவனம்.. டிகிரி முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பல்வேறு துறைகளில் கால்பதித்துள்ள அமேசானின் ஐடி நிறுவனத்தில் வீட்டில் இருந்தே பணியாற்ற தேவையான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். டிகிரி முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு அமேசான் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் சார்பில் ஆன்லைன் வர்த்தகம், க்ளைட் கம்ப்யூட்டிங், ஆன்லைன் விளம்பரம், டிஜிட்டல் ஸ்ட்ரிம்மிங், ஏஐ உள்ளிட்ட பல்வேறு துறை சர்வீஸ்கள் வழங்கப்பட்டு வருகிறது.

it jobs jobs job

தமிழகத்தில் சென்னையில் அமேசான் நிறுவனம் இயங்கி வரும் நிலையில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

தற்போதைய அறிவிப்பின்படி அமேசான் நிறுவனத்தில் அப்பீல்ஸ் அட்மினிஸ்ட்ரேட்டர் (Appeals Administrator)பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அடிப்படையான தகுதி என்று பார்த்தால் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும் மைக்ரோசாட் ஆபிஸ் தயாரிப்புகள் மற்றும் அப்ளிகேஷனில் 6 மாதங்களுக்கு அதிகமாக பணியாற்றிய அனுபவம் கொண்டிருக்க வேண்டும். மேலும் கான்டக்ட் சென்டர், கஸ்டமர் சர்வீஸ், எச்ஆர் அல்லது அதற்கு தொடர்புடைய பிரிவில் ஒரு ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். மேலும் கஸ்டமரை தொடர்பு கொள்வது, பிரச்சனைகளை தீர்க்கும் திறன் கொண்டிருக்க வேண்டும்.

மேலும் டேட்டா ஸ்பேஸ், ரீசர்ஜிங் ஸ்கில்ஸ், ஆங்கிலத்தில் பிழையின்றி பேசவும், எழுதவும், படிக்கவும் தெரிந்திருப்பது மற்றும் பிற மொழிகள் தெரிந்திருப்பது என்பது விண்ணப்பத்தாரர்களுக்கு பிளஸ் பாயிண்டாக அமையும். ஆனால் இந்த பணி என்பது ஒப்பந்த அடிப்படையிலானது. தற்போது வேலைக்கு தேர்வாகும் நபர்கள் 10 மாதங்கள் வரை பணியமர்த்தப்படுவர்கள்.

பணிக்கு தேர்வாகும் நபர்கள் Remote முறையில் பணியாற்றலாம். அதாவது அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்தே வேலை செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது. தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தகுதி மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்படும்.

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அமேசான் நிறுவனத்தின் இணையதளம் சென்று விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி குறிப்பிடப்படவில்லை. இதனால் முன்கூட்டியே விண்ணப்பம் செய்வது நல்லது. ஏனென்றால் எப்போது வேண்டுமானாலும் இந்த பணிக்கான விண்ணப்ப பதிவு முடிவுக்கு வரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+