ரிசர்வ் வங்கியில் வேலை.. 450 பணியிடங்கள்.. டிகிரி முடித்திருந்தால் போதும்.. விண்ணப்பிக்க ரெடியா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ரிசர்வ் வங்கியில் 450 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இது பற்றிய விவரங்களை காணலாம்.

ஆர்.பி.ஐ எனப்படும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள 450 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தேவையான கல்வி தகுதிகள் மற்றும் வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

 Reserve bank jobs: Recruitment for the Post of Assistant 450 vacancy, how to apply full details

கல்வி தகுதி என்ன?: அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்ப்பு முடித்து இருக்க வேண்டும். குறைந்த பட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி அவசியம். எஸ்.சி/ எஸ்.டி/மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் பாஸ் செய்து இருந்தால் போதுமானது.

வயது வரம்பு: 1-9-2023 அன்றைய தேதிப்படி 20 முதல் 28 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 2-9-1995-க்கு முன்பாகவோ, 1-9-2003-க்கு பின்பாகவோ பிறந்தவர்களாக இருக்கக்கூடாது. அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு. அதாவது எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு வயது வரம்பில் 5 ஆண்டுகள் தளர்வு உண்டு. ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. அதாவது 31 வயது வரை இப்பிரிவினர் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பது எப்படி? தகுதியும் ஆர்வமும் கொண்ட விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். https://ibpsonline.ibps.in/rbiaaaug23/ என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் ரூ.50 செலுத்த வேண்டும். பொது பிரிவினர், ஒபிசி மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய வகுப்பினர் ரூ.450 கட்டணமாக செலுத்த வேண்டும்.

தேர்வு முறை: முதல் நிலைத்தேர்வு, மெயின் தேர்வு, மொழி திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் தேர்வு நடைபெறுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, கோவை, மதுரை, நாமக்கல், சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய இடங்களில் முதல் நிலைத்தேர்வு நடைபெறும். சென்னை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய இடங்களில் மெயின் தேர்வு நடைபெறும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ரிசர்வ் வங்கியில் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 4-10-2023 ஆகும். முதன்மை தேர்வு அக்டோபர் 21 மற்றும் 23 ஆம் தேதிகள் நடைபெறலாம் என்று தோராயமான தேதியை வெளியிட்டுள்ளது. அதேபோல், மெயின் தேர்வு டிசம்பர் 02, 2023 அன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு குறித்த முழு விவரங்களையும் தெரிந்து கொள்ள https://opportunities.rbi.org.in/Scripts/Vacancies.aspx என்ற இணைய பக்கத்தில் கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+