ரயில்வே வேலைதான் லட்சியமா? தேர்வர்கள் எதிர்பார்த்த அறிவிப்பு.. 2026 ஆண்டு அட்டவணை வந்தாச்சு
சென்னை: ரயில்வே பணிகளுக்காக ஆர்.ஆர்.பி எனப்படும் ரயில்வே தேர்வு வாரியம் உரிய அறிவிப்புகள் வெளியிட்டு தேர்வுகளை நடத்தி ஆட்சேர்ப்பு பணிகளை நடத்துகிறது. ஆர்.ஆர்பி நடத்தும் இந்த போட்டி தேர்வுகளுக்கு தேர்வர்கள் முன்கூட்டியே தயாராகும் வகையில், 2026 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை (RRB Exam Calendar) தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக உள்ள இந்தியன் ரயில்வேயில் பல லட்சக்கணக்கான ஊழியர்கள் வேலை செய்து வருகிறார்கள். ரயில்வேயில் லோகோ பைலட், டிக்கெட் பரிசோதகர், டிக்கெட் கிளர்க், ஸ்டேஷன் மாஸ்டர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

ரயில்வே தேர்வு ஆண்டு அட்டவணை
ரயில்வேயில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கை நிறைய சம்பளம், சலுகைகள் கிடைக்கும். பணி பாதுகாப்பு கிடைக்கும் என்பதால், ரயில்வேயில் வேலை பார்க்க வேணும் என்ற கனவுடன் பல லட்சக்கணக்கான தேர்வர்கள், ரயில்வே நடத்தும் போட்டித்தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள். ரயில்வேயை பொறுத்தவரை தேர்வர்கள் தேர்வுக்கு தயராகுவதற்கு அடுத்த ஆண்டு என்னென்ன தேர்வுகள் நடத்தப்படும் என்பதற்கான ஆண்டு அட்டவணை Annual planner வெளியிடப்படுவது வழக்கம்.
லோகோ பைலட் பணி
அந்த வகையில், 2026 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவண வெளியிடப்பட்டுள்ளது. எந்தெந்த தேர்வுகள் எப்போது அறிவிக்கப்படும் என்ற விவரம் இதில் அடங்கியிருக்கும். இதன்படி, உதவி லோகோ பைலட் பணிக்கான அறிவிப்பு பிப்ரவரி மாதம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
* டெக்னிஷியன் பணிக்கு மார்ச் மாதம் அறிவிப்பு வெளியாக உள்ளது.
* செக்ஷன் கண்ட்ரோலர் பணிக்கு ஏப்ரல் மாதம் அறிவிப்பு வெளியாக உள்ளது.
* பாரமெடிக்கல் பிரிவு பணிகளுக்கு ஜூலை மாதம் அறிவிப்பு வெளியாக உள்ளது.
* ஜூனியர் என்ஜினியர் பணிக்கு ஜூலை மாதம் அறிவிப்பு வெளியாக உள்ளது.
குரூப் டி எப்போது?
* ரயில்வே நான் டெக்னிக்கல் பாப்புலர் கேட்டகிரிஸ் (என்.டி.பி.சி- பட்டப்படிப்பு) ஆகஸ்ட் மாதம் அறிவிப்பு வெளியாக உள்ளது.
* அமைச்சகம் & Isolated Categories- செப்டம்பர் மாதம் அறிவிப்பு வெளியாகும் என் எதிஎர்பார்க்கப்படுகிறது
* குரூப் டி லெவல் 1: அக்டோர் மாதம் அறிவிப்பு வெளியாகும்.
ரயில்வே நடத்தும் தேர்வுகளில் அதிக எண்ணிக்கையில் காலிப்பணியிடங்கள் குரூப் டி-யில்தான் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
காஞ்சிபுரத்தில் சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணி.. 39 காலியிடங்கள்! சூப்பர் சான்ஸ் -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications