Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

RRB Group D: 22 ஆயிரம் பணியிடங்கள்.. ரயில்வே குரூப் டி அப்டேட் வந்தாச்சு.. தூள் கிளப்புங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்.ஆர்.பி குரூப் டி (RRB Group D) பணியிடங்களை நிரப்ப ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 22 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. 10 ஆம் வகுப்பு அல்லது ஐடிஐ முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.18,800 சம்பளம் வழங்கப்படும். இது தொடர்பான விவரங்களை இங்கு பார்க்கலாம்.

நாட்டின் மிகப்பெரிய அரசு நிறுவனமாக ரயில்வே உள்ளது. ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ரயில்வேயில் நாடு முழுவதும் லட்சக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். ரயில்வேயில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு கை நிறைய சம்பளம், குடியிருப்பு, பயண வசதி சலுகைகள் என பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.

job rrb Employment

குரூப் டி பணியிடங்கள்

இதனால், நாடு முழுவதும் பல லட்சக்கணக்கான தேர்வர்கள் ரயில்வே வேலைக்கு தயாராகி வருகிறார்கள். ரயில்வேயை பொறுத்தவரை ஆர்.ஆர்.பி எனப்படும் ரயில்வே தேர்வு வாரியம் உரிய தேர்வுகளை நடத்தி காலிப் பணியிடங்களை நிரப்பி வருகிறது. ரயில்வே நடத்தும் தேர்வுகளில் குரூப் டி தேர்வுகள் மிகவும் பிரபலமாக உள்ளது.

இதில் பல ஆயிரம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்பதால் ரயில்வே நடத்தும் இந்த குரூப் டி தேர்வுகளுக்காக ஆண்டுக்கணக்கில் தேர்வர்கள் தயாராகி வருகிறார்கள். இந்த நிலையில், தேர்வர்கள் பெரிதும் எதிர்பார்த்த ரயில்வே குரூப் டி தேர்வு பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது. இதுபற்றிய விவரங்களை பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

லெவல் 1 (Group D) - 22,000 (தோராயமானது)

உதவியாளர் (Track Machine): 600
உதவியாளர் (Bridge): 600
தண்டவாள பராமரிப்பாளர் (Group IV): 11000
உதவியாளர் (P-way): 300
உதவியாளர் (TRD): 800
உதவியாளர் Loco Shed (Electrical): 200
உதவியாளர் Operations (Electrical): 500
உதவியாளர் (TL & AC): 50
உதவியாளர் (C & W): 1000
உதவியாளர் B: 5000
உதவியாளர் (S & T): 1500

என மொத்தம் 22,000 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இது உத்தேச பட்டியல் மட்டுமே.

கல்வித் தகுதி:

கல்வித் தகுதியை பொறுத்தவரை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இருந்து பத்தாம் வகுப்பு அல்லது ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

* (01.01.2026) தேதிப்படி 18 வயது முதல் 33 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு அதிகபட்சம் 5 ஆண்டுகள் தளர்வுகள் அளிக்கப்படும்.

* ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், பொதுப் பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும், எஸ்சி / எஸ்டி பிரிவை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 15 ஆண்டுகளும் வயது உச்ச வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது. ஓபிசி பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 13 ஆண்டுகள் வயது உச்ச வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம் எவ்வளவு?

மத்திய அரசின் ஊதிய கமிஷன் 7-வது படி ஆரம்பமே ரூ.18,800 சம்பளமாக கிடைக்கும். விரைவில் 8-வது ஊதிய கமிஷன் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதால் இந்த சம்பளம் கணிசமாக உயர வாய்ப்பு உள்ளது.

தேர்வு முறை:

* கணினி வழியிலான தேர்வு, உடல் திறன் தேர்வு (PET), சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆர்.ஆர்.பி குரூப் டி தேர்வுக்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும்.
* எஸ்சி / எஸ்டி, பெண்கள், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ரூ.250 கட்டணம் ஆகும். தேர்வு எழுதிய பிறகு ரூ.500 கட்டணம் செலுத்தியவர்களுக்கு ரூ.400 திருப்பி தரப்படும். ரூ.250 கட்டணம் செலுத்தியவர்களுக்கு முழு கட்டணமும் திருப்பி தரப்படும்.

எப்போது விண்ணப்பிக்க முடியும்?

* விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கும் நாள்: 21.01.2026 ஆகும்.
* விண்ணப்பிக்க அவகாசம் முடியும் நாள்: 20.02.2026 ஆகும்.

தற்போது குரூப் டி தேர்வுக்கான ஷார்ட் நோட்டீஸ் மட்டுமே வெளியாகியுள்ளது. வரும் நாட்களில் விரிவான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+