RRB Group D: ரயில்வே குரூப் டி: 22,195 பணியிடங்கள்.. ஒரு நாள்தான் டைம் இருக்கு! மறக்காமல் விண்ணப்பிங்க
சென்னை: நாட்டின் மிகப்பெரிய மத்திய அரசு நிறுவனமான இந்தியன் ரயில்வேயில் குரூப் டி (RRB Group D) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருந்தது. மொத்தம் 22,195 பணியிடங்கள் நிரப்பப்படும் நிலையில் நாளை தான் இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும்.
இந்தியாவின் மிகப்பெரிய அரசு நிறுவனமாக ரயில்வே உள்ளது. ரயில்வே துறையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள் ரயில்வேயை பொறுத்தவரை மத்திய அரசு பணி என்பதால் ரயில்வே பணியில் எப்படியாவது சேர வேண்டும் என்பது பல லட்சம் இளைஞர்களின் கனவாக உள்ளது.

ரயில்வேயில் காலிப்பணியிடங்கள்
ரயில்வேயை பொறுத்தவரை ஆர்.ஆர்.பி எனப்படும் ரயில்வே தேர்வு வரியம் காலிப்பணியிடங்களை நிரப்பும் பணியை செய்து வருகிறது. ரயில்வே வெளியிடும் தேர்வு அறிவிப்புகளில் பத்தாம் வகுப்பு, ஐடிஐ மட்டுமே கல்வித் தகுதி, தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதும் உடனடி வேலை என்பதல் குரூப் டி தெர்வு தேர்வர்கள் மத்தியில் பெரும் எதிர்பர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில், 2026 ஆம் ஆண்டுக்கான குரூப் டி தேர்வு அறிவிப்பை ரயில்வே தேர்வு வாரியம் வெளியிட்டது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளைதான் (மார்ச்02) எனவே, இதுவரை விண்ணப்பிக்காமல் இருப்பவர்களுக்கும் விண்ணப்பிக்க மறந்தவர்களுக்கும் ஒரு நினைவூட்டலாக மீண்டும் பார்ப்போம்.
பணியிடங்கள் விவரம்:
குரூப் டி லெவல்-ல் 22,295 காலியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதியை பொறுத்தவரை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து பத்தாம் வகுப்பு அல்லது ஐடிஐ முடித்து இருக்க வேண்டும்.
வயது வரம்பு
வயது வரம்பை பொறுத்தவரை குறைந்தபட்ச வயது 18. அதிகபட்ச வயது 33. எஸ்சி/எஸ்டி பிரிவினர் என்றால் 38 வயது வரையும், ஒபிசி பிரிவினர் என்றால் 36 வயது வரையும், பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகள் என்றால் 43 வயது வரையும், ஒபிசி பிரிவை சேர்ந்த மாற்றுத்திறனாளி என்றால் 46 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்:
மத்திய அரசின் 7-வது பே கமிஷன் லெவல் 1 படி குரூப் டி பணிக்கு 18,000- சம்பளம் வழங்கப்படும். அதிகபட்சம் ரூ.56,900 வரை சம்பளம் இருக்கும். இதுபோக ரயில்வே ஊழியர்களுக்கு உண்டான அனைத்து சலுகைகளும் விதிப்படி கிடைக்கும்.
தேர்வு முறை:
உடல் திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். தேர்வை எழுதுபவர்களுக்கு ரூ.400 கட்டணம் திருப்பி அளிக்கப்படும். எஸ்சி/எஸ்டி, பெண்கள், இடபிள்யூடி, திருநங்கைகள் ஆகியவருக்கு ரூ.250 கட்டணம் ஆகும். விண்ணப்பிக்க நாளை தான் கடைசி நாள் (மார்ச் 2 ஆம் தேதி) ஆகும். எனவே இதுவரை விண்ணப்பிக்க மறந்தவர்கள் உடனே விண்ணப்பித்து விடுங்கள்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: https://www.rrbchennai.gov.in/
-
அதிகாலையில் வந்த மெயில்.. மீண்டும் வேலையை காட்டிய மெட்டா! ஊழியர்கள் கண்ணீர்! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்!












Click it and Unblock the Notifications