இந்தியன் ரயில்வேயில் வேலை.. 312 பணியிடங்கள்.. 45,000 வரை சம்பளம்.. செம சான்ஸ்! விட்றாதீங்க
சென்னை: இந்தியன் ரயில்வேயில் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 312 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு யார் யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும் என்ற விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்.
ரயில்வேயில் வேலை பார்க்க வேண்டும் என்பது பல லட்சக்கணக்கான தேர்வர்களின் கனவாக உள்ளது. நல்ல சம்பள சலுகைகள் கிடைப்பதால் ரயில்வே வேலைக்கு சென்றால் போதும்.. வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம் என கருதி பல லட்சக்கணக்கான தேர்வர்கள் ரயில்வே தேர்வுக்கு படித்து வருகிறார்கள்.

இதற்கான தேர்வினை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) வாயிலாக நிரப்பப்படுகின்றன. அந்த வகையில் தற்போது ரயில்வேயில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 312 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆர்ஆர்பி வெளியிட்டுள்ளது. இது குறித்த விவரங்களை இங்கு பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
மூத்த விளம்பர ஆய்வாளர் - 15
ஆய்வக உதவியாளர் தரம் III - 39
தலைமை சட்ட உதவியாளர் - 22
இளநிலை மொழிபெயர்ப்பாளர் / இந்தி - 202
பணியாளர் மற்றும் நலத்துறை ஆய்வாளர் - 24
அரசு வழக்கறிஞர் - 07
அறிவியல் உதவியாளர் (பயிற்சி) - 02
அறிவியல் மேற்பார்வையாளர் / பணிச்சூழலியல் மற்றும் பயிற்சி - 01
கல்வித் தகுதி
* மூத்த விளம்பர ஆய்வாளர் பதவிக்கு, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருப்பதோடு, மக்கள் தொடர்பு / விளம்பரம் / இதழியல் துறையில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும். இத்துறைகளில் இரண்டு வருட அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
* ஆய்வக உதவியாளர் பதவிக்கு அறிவியல் (இயற்பியல் மற்றும் வேதியியல்) பாடங்களுடன் 12 ஆம் வகுப்பு அல்லது அதற்குச் சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
* தலைமை சட்ட உதவியாளர் பதவிக்கு, சட்டத்தில் பல்கலைக்கழக பட்டம் பெற்றதோடு, நீதிமன்றத்தில் வழக்கறிஞராக மூன்று வருட பணி அனுபவம் அவசியம். மேலும், ரயில்வே நிர்வாகத்தின் எந்தவொரு பிரிவிலும் குறைந்தது ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்த, இளங்கலைச் சட்டம் (LLB) பட்டம் பெற்ற ரயில்வே ஊழியர்களும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.
* இளநிலை மொழிபெயர்ப்பாளர் / இந்தி பதவிக்கு, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இந்தி அல்லது ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் அல்லது அதற்குச் சமமான பட்டம் பெற்றிருக்க வேண்டும். இதற்கு, பட்டப்படிப்பு அளவில் ஆங்கிலம் அல்லது இந்தி கட்டாய அல்லது விருப்பப் பாடமாக இருந்திருக்க வேண்டும்
சம்பளம் எவ்வளவு:
* மூத்த விளம்பர ஆய்வாளர், ஆய்வக உதவியாளர் தரம் III, இளநிலை மொழிபெயர்ப்பாளர் / இந்தி, பணியாளர் மற்றும் நலத்துறை ஆய்வாளர், மற்றும் அறிவியல் உதவியாளர் (பயிற்சி) ஆகிய பதவிகளுக்கு நிலை-6 இல் ரூ.35,400/- சம்பளம் வழங்கப்படும்.
* தலைமை சட்ட உதவியாளர் பதவிக்கு நிலை-2 இல் ரூ.19,900/- வழங்கப்படும்.
* அரசு வழக்கறிஞர் மற்றும் அறிவியல் மேற்பார்வையாளர் / பணிச்சூழலியல் மற்றும் பயிற்சி ஆகிய பதவிகளுக்கு நிலை-7 இல் ரூ.44,900/- சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு முறை:
கணினி அடிப்படையிலான தேர்வு (CBT), திறனறித் தேர்வு / திறமைத் தேர்வு / மொழிபெயர்ப்புத் தேர்வு, மருத்துவப் பரிசோதனை மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு போன்ற பல்வேறு நிலைகள் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் முறையில் செலுத்தப்பட வேண்டும். மாற்றுத்திறனாளிகள் SC / ST, பெண்கள் மற்றும் EBC விண்ணப்பதாரர்களுக்கு ரூ.250/- (தேர்வு எழுதிய பிறகு ரூ.250/- திரும்பப் தரப்படும்). மற்ற விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500/- (தேர்வு எழுதிய பிறகு ரூ.400/- திரும்பப் பெறப்படும்).
ஆர்வமுள்ள மற்றும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள், அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.rrbapply.gov.in/ விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வரும் ஜனவரி 29 ஆம் தேதி கடைசி நாளாகும்.
அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.rrbchennai.gov.in/












Click it and Unblock the Notifications