Railway Job: ரயில்வேயில் டிக்கெட் சூப்பர்வைசர் வேலை.. 5,810 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்.. தட்டி தூக்குங்க
சென்னை: ரயில்வேயில் (Railway Job) தலைமை வணிக டிக்கெட் மேற்பார்வையாளர், ஸ்டேஷன் மாஸ்டர், சரக்கு ரயில் மேலாளர், இளநிலை கணக்கு உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 5,810 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. சம்பளத்தை பொறுத்தவரை 34 ஆயிரம் வரை வழங்கப்படும். இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும் என்பதை இங்கு பார்க்கலாம்.
நாட்டின் மிகப்பெரிய அரசு நிறுவனமாக ரயில்வே உள்ளது. மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ரயில்வேயில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

ரயில்வே வேலைவாய்ப்பு
ரயில்வே துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கையிருப்புச் சம்பளம், பயணச் சலுகை, இதர சலுகைகள் வழங்கப்படுவதால் ரயில்வே துறையில் பணியாற்ற வேண்டும் என்பது நாடு முழுவதும் உள்ள பல லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவாக உள்ளது. இதில் ஏற்படும் காலியிடங்கள் ஆர்ஆர்பி எனப்படும் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் வாயிலாக நிரப்பப்படுகின்றன.
போட்டித் தேர்வு உள்ளிட்டவை நடத்தி தகுதியான தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவது வழக்கம். அதன்படி தேர்வர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக ரயில்வே என்டிபிசி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி மொத்தம் 5810 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. தலைமை வணிக டிக்கெட் மேற்பார்வையாளர், ஸ்டேஷன் மாஸ்டர், சரக்கு ரயில் மேலாளர், இளநிலை கணக்கு உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
* தலைமை வணிக டிக்கெட் மேற்பார்வையாளர் - 161 இடங்கள்,
* ஸ்டேஷன் மாஸ்டர் - 615 இடங்கள்,
* சரக்கு ரயில் மேலாளர் - 3416 இடங்கள்,
* இளநிலை கணக்கு உதவியாளர் (தட்டச்சர்) - 921 இடங்கள்,
* முதுநிலை எழுத்தர் (தட்டச்சர்) - 638 இடங்கள்
* போக்குவரத்து உதவியாளர் - 59 இடங்கள் என மொத்தம் 5810 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வித் தகுதி:
* கல்வித் தகுதியைப் பொறுத்தவரை, தலைமை வணிக - டிக்கெட் மேற்பார்வையாளர், ஸ்டேஷன் மாஸ்டர், சரக்கு ரயில் மேலாளர், மற்றும் போக்குவரத்து உதவியாளர் ஆகிய பதவிகளுக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்து இருந்தால் போதும்.
* இளநிலை கணக்கு உதவியாளர் - தட்டச்சர் மற்றும் முதுநிலை எழுத்தர் - தட்டச்சர் ஆகிய பதவிகளுக்கு, பட்டப்படிப்புடன் கணினியில் ஆங்கிலம் அல்லது இந்தி மொழியில் தட்டச்சுத் திறன் பெற்றிருப்பது அவசியம் ஆகும்.
வயது வரம்பு
2025 நவம்பர் 20 அன்று தேதிப்படி, 18 முதல் 33 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்க முடியும். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். SC/ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகளும், OBC விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகளும், PwBD (பொது/EWS) விண்ணப்பதாரர்களுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம் எவ்வளவு?
* தலைமை வணிக டிக்கெட் மேற்பார்வையாளர் - ரூ.35,400/-
* ஸ்டேஷன் மாஸ்டர் - ரூ.35,400/-
* சரக்கு ரயில் மேலாளர் - ரூ.29,200/-
* இளநிலை கணக்கு உதவியாளர் (தட்டச்சர்) - ரூ.29,200/-
* முதுநிலை எழுத்தர் (தட்டச்சர்) - ரூ.29,200/-
* போக்குவரத்து உதவியாளர் - ரூ.25,500/-
தேர்வு முறை:
தேர்வு முறையை பொறுத்தவரை, முதல் நிலை கணினி அடிப்படையிலான தேர்வு (CBT), இரண்டாம் நிலை கணினி அடிப்படையிலான தேர்வு (CBT), தட்டச்சு திறன் தேர்வு/CBAT (சில பதவிகளுக்கு மட்டும்) மற்றும் ஆவண சரிபார்ப்பு (DC) / மருத்துவ பரிசோதனை (ME) நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம்
விண்ணப்பக் கட்டணத்தை பொறுத்தவரை ஆன்லைன் வழியாக கட்ட வேண்டும். பொதுப்பிரிவினர் என்றால் ரூ.500 செலுத்த வேண்டும். தேர்வுக்கு பின்னர் மீதி 400 ரூபாய் திருப்பி அளிக்கப்படும். PwBD/SC/ST/பெண்/EBC விண்ணப்பதாரர்கள் என்றால் ரூ.250 செலுத்தினால் போது. தேர்வு எழுதிய பிறகு முழு பணமும் திருப்பி அனுப்பப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது?
தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் RRB இணையதளத்திற்கு https://www.rrbapply.gov.in/ சென்று ஆன்லைன் மூலமாக விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து விண்ணபிக்கலாம்.
* விண்ணப்பிக்க கால அவகாசம் தொடங்கிய நாள் 21.10.2025 ஆகும்.
* விண்ணப்பிக்க கால அவகாசம் முடியும் நாள் 27.11.2025 ஆகும்.
* தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.rrbchennai.gov.in/downloads/Final-CEN-06-2025-21-10-2025-Publish.pdf
-
அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை.. தமிழக அரசு வெளியிட்ட குட்நியூஸ்.. அரசாணையை கவனித்தீர்களா? -
ஆரோவில் நிலம் 350 கோடி.. ஆளுநர் ஆர்.என்.ரவி, பெண் ஐஏஎஸ் அதிகாரி மீது பறந்த புகார்.. முழு விவரம் -
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
"கோடீஸ்வரர்".. ராஜ்யசபா எம்பியாகும் தேமுதிகவின் எல்கே சுதீஷ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக -
ஏழைகளின் ஏவுகணை.. இஸ்ரேல், அமெரிக்காவை அதிரவைக்கும் ஈரானின் குட்டி ஜாம்பவான்.. கேம் சேஞ்சர்












Click it and Unblock the Notifications