Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரயில்வேயில் 11,558 பணியிடங்கள்.. வந்தது மெகா அறிவிப்பு.. செம சான்ஸ்! விட்றாதீங்க.. ரெடியாகுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்வர்கள் பலரும் எதிர்பார்த்த அறிவிப்பினை ஆர்ஆர்பி என்டிபிசி வெளியிட்டுள்ளது. ரயில்வேயின் என்டிசிபி - பிரிவில் 11,558 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட தெளிவான விவரங்களை இங்கே பார்க்கலாம்.

மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் இந்தியன் ரயில்வே. இந்தியன் ரயில்வெயில் சுமார் 12 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். பணி பாதுகாப்பு, கை நிறைய சம்பளம் + சலுகை உள்ளிட்டவை இருப்பதால் ரயில்வேயில் பணி செய்ய வேண்டும் என்பது வேலை தேடும் இளைஞர்களின் பெரும் கனவாக உள்ளது.

job rrb railway job

ரயில்வேயில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்படுவது வழக்கம். ரயில்வே நடத்தும் போட்டித்தேர்வுகளில் பங்கேற்று ரயில்வே வேலைகளில் எப்படியாவது சேர்ந்து விட வேண்டும் என்ற பெரும் லட்சியத்துடன் இளைஞர்கள் பலர், ரயில்வே வெளியிடும் ஆட்சேர்ப்பு அறிவிப்பை ஆர்வத்துடன் எதிர்பார்த்து உள்ளனர்.

இந்த நிலையில்தான், ரயில்வேயில் என்டிசிபி- பிரிவில் 11,558 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இங்கே தெளிவாக பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:
1. Chief கமர்ஷியல் - டிக்கெட் மேற்பார்வையாளர் - 1,736 பணியிடங்கள்
2. ஸ்டேஷன் மாஸ்டர் - 994
3. சரக்கு ரயில் மேலாளர் - 3,144
4. ஜூனியர் அக்கவுண்ட் அசிஸ்டென்ட் - டைப்பிஸ்ட் - 1,507
5. சீனியர் கிளார்க் - டைப்பிஸ்ட் - 732
6. கமர்ஷியல் - டிக்கெட் கிளார்க் - 2,022
7. கணக்கு எழுத்தர் - தட்டச்சர் - 361
8. ஜூனியர் கிளார்க் - தட்டச்சர் - 990
9. ரயில்கள் கிளார்க் - 72

என 9 வகையான பணியிடங்களில் 11,558 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

கல்வி தகுதி: வணிக தலைமை - டிக்கெட் சூப்பர்வைசர், ஸ்டேஷன் மாஸ்டர், சரக்கு ரயில் மேனேஜர், ஜூனியர் அக்கவுண்டண்ட் அஸ்சிஸ்டண்ட் டைபிஸ்ட் , சீனியர் கிளர்க் ஆகிய பணியிடங்களுக்கு ஏதாவது ஒரு டிகிரி முடித்து இருக்க வேண்டும். சீனியர் கிளர்க், கமர்ஷியல், அக்கவுண்ட்ஸ் கிளர்க், ஜூனியர் கிளர்க், ரயில் கிளர்க் ஆகிய பணியிடங்களுக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். டைப்பிஸ்ட் பணிக்கு தட்டச்சு திறன் அவசியம்.

வயது வரம்பு: டிகிரி கல்வி தகுதி கொண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 18வயது முதல் 36 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 12-ஆம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட பணியிடத்திற்கு அதிகபட்ச வயது வரம்பு 33 ஆகும். அரசு விதிகளின் படி அனைத்து பணியிடத்திற்கு வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்.சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வுகள் அளிக்கப்படும்.

சம்பளம் எவ்வளவு?:
Chief கமர்ஷியல் - டிக்கெட் மேற்பார்வையாளர் : மாதம் ரூ. 35,400/-
ஸ்டேஷன் மாஸ்டர் - மாதம் ரூ. 35,400/-
சீனியர்கிளர்க் - மாதம் ரூ. 29,200/-
கமர்ஷியல் டிக்கெட் கிளர்க் - மாதம் 21,700/-
இதர பணியிடங்களுக்கு மாதம் ரூ.19,900 வழங்கப்படும்.

தேர்வு முறை: சிபிடி எனப்படும் கணிணி வழிதேர்வு இரண்டு கட்டமாக நடைபெறும். டைப்பிங் பணிகளுக்கு டைப்பிங் திறன் தேர்வு உண்டு. எழுத்து தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு / மருத்துவ பரிசோதனைக்கு அழைக்கப்படுவார்கள். சிபிடி தேர்வு நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடைபெறும்.

விண்ணப்ப கட்டணம்: ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதார்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக ரூ.500- செலுத்த வேண்டும். தேர்வு எழுதிய பிறகு ரூ.400 திருப்பி அளிக்கப்படும். பெண்கள், எஸ்சி/எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், உள்ளிட்ட பிரிவினருக்கு ரூ.250 திருப்பி அளிக்கப்படும். ஆன்லைன் வழியாக மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?: ஆர்வமும், தேவையான கல்வி தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். தேர்வு அறிவிப்பினை விண்ணப்பதாரர்கள் ஒருமுறை நன்கு படித்து தெரிந்து கொள்ளவும். விண்ணப்பிக்க அவகாசம் வரும் 14-09-2024 அன்று தொடங்குகிறது. விண்ணப்பிக்க கடைசி நாள்: 13.10.2024 ஆகும்.

12 ஆம் வகுப்பு தகுதி கொண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அவகாசம் 21.09.2024 அன்று தொடங்குகிறது. 26.10.2024 அன்று விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும். தேர்வு அறிவிப்பு பற்றிய ஷார்ட் நோட்டீஸ் தற்போது வெளியாகியிருக்கிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ரயில்வே தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+