ரயில்வேயில் டிக்கெட் கிளர்க் வேலை.. 8,875 பணியிடங்கள்.. இப்படி ஒரு சான்ஸ் கிடைக்காது.. விட்றாதீங்க
சென்னை: இந்தியன் ரயில்வேயில் டிக்கெட் கிளர்க் உள்பட பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 8,875 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 12 ஆம் வகுப்பு மற்றும் டிகிடி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். சம்பளம் எவ்வளவு, எப்படி விண்ணப்பிப்பது என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கேர் பார்க்கலாம்.
நாட்டின் மிகப்பெரிய அரசு நிறுவனமாக ரயில்வே உள்ளது. மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ரயில்வேயில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். ரயில்வே துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கையிருப்புச் சம்பளம், பயணச் சலுகை, இதர சலுகைகள் வழங்கப்படுவதால் ரயில்வே துறையில் பணியாற்ற வேண்டும் என்பது நாடு முழுவதும் உள்ள பல லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவாக உள்ளது.

ரயில்வேயில் கிளர்க் வேலை
ஆர்.ஆர்.பி எனப்படும் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் வாயிலாக ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. போட்டித் தேர்வு உள்ளிட்டவை நடத்தி தகுதியான தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவது வழக்கம். இதனால் ரயில்வே வெளியிடும் தேர்வு அறிவிப்புகளுக்காக பல லட்சக்கணக்கான தேர்வர்கள் ஆண்டுக்கணக்கில் படித்து வருகிறார்கள்.
இந்த நிலையில்தான், தேர்வர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக ரயில்வே என்.டி.பிசி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வித் தகுதி என்ன என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
ரயில் டிக்கெட் கிளர்க் - 77
அக்கவுண்ட்ஸ் கிளர்க் மற்றும் டைப்பிஸ்ட் - 394
ஜூனியர் கிளர்க் மற்றும் டைப்பிஸ்ட் - 163
வணிக மற்றும் டிக்கெட் கிளர்க் - 2,424
சீனியர் கிளர்க் மற்றும் டைப்பிஸ்ட் - 638
ஜூனியர் அக்கவுண்ட்ஸ் அசிஸ்டெண்ட் மற்றும் டைப்பிஸ்ட் - 921
தலைமை வணிக மற்றும் டிக்கெட் கிளர்க் - 161
போக்குவரத்து உதவியாளர் - 59
சரக்கு ரயில் மேலாளர் - 3,423
ஸ்டேஷன் மாஸ்டர் - 615
என மொத்தம் 8,875 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வி தகுதி:
8,875 காலிப் பணியிடங்களில் 5,817 பணியிடங்களுக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும். இதர 3,058 பணியிடங்களுக்கு 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ரயில்வே தரப்பில் தற்போது ஷார்ட் நோட்டீஸ் மட்டுமே வெளியாகியுள்ளது. விரிவான விவரங்களுடன் விரைவில் தேர்வு அறிவிக்கை வெளியிடப்படும். அதில் தேர்வர்கள் முழு விவரங்களை பார்த்து உறுதி செய்து கொள்ளலாம்.
வயது வரம்பு:
18 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். பட்டப்படிப்பு கல்வி தகுதி கொண்ட பணியிடங்களுக்கு வயது உச்ச வரம்பு 33 ஆகும். எஸ்சி/எஸ்டி, ஓபிசி, பொதுப்பிரிவு மாற்றுத் திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதிமுறைகளின் படி வயது உச்ச வரம்பில் சலுகைகள் அளிக்கப்படும்.
தேர்வு முறை:
கணினி வழியிலான (சிபிடி) இரண்டு கட்டத் தேர்வுகள் நடைபெறும். திறன் தேர்வு அல்லது டைப்பிங் தேர்வும் தேவையான பணியிடங்களுக்கு நடைபெறும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனைக்கு அழைக்கப்படுவார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி?
தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கான ஷார்ட் நோட்டீஸ் 23ஆம் தேதி வெளியானது. முழு அறிவிப்பு வெளியான பிறகு விண்ணப்பிக்க கால அவகாசம் உள்ளிட்ட விவரங்கள் வெளியாகும். அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்குள் விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி/பெண்கள் உள்ளிட்ட பிரிவினருக்கு ரூ.250 ஆகும்.
தேர்வு எப்படி இருக்கும்?
சிபிடி 1 - தேர்வு 90 நிமிடங்கள் நடைபெறும். மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். (பொது விழிப்புணர்வு - 40, கணிதவியல் - 30, ரீசனிங் - 30) என கேள்விகள் இடம் பெற்றிருக்கும்.
சிபிடி 2 (மெயின் தேர்வு) - மொத்தம் 120 கேள்விகள் இடம் பெற்றிருக்கும். (பொது விழிப்புணர்வு - 50, கணிதம் - 35, ரீசனிங் - 35) என கேள்விகள் இடம் பெற்றிருக்கும். 90 நிமிடங்கள் இந்த தேர்வு நடைபெறும். நெகட்டிவ் மதிப்பெண்களும் உண்டு. ஒவ்வொரு தவறான விடைக்கும் 0.25 மதிப்பெண்கள் கழிக்கப்படும்.
சம்பளம்:
7வது பே கமிஷன் படி மாதம் ரூ.35,400 வரை வழங்கப்படலாம் எனத் தெரிகிறது. பதவிக்கு தகுந்தபடி இது மாறுபடும்.
கூடுதல் விவரங்களை பார்க்க தேர்வர்கள் www.rrbcdg.gov.in
என்ற இணையதளத்தை செக் செய்ய வலியுறுத்தப்படுகிறார்கள்.
-
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications