ரயில்வே ஸ்டேசன் மாஸ்டர் சம்பளம் எவ்வளவு? அவரது பணிகள் என்ன? முழுமையான தகவல்கள்
சென்னை: ரயில்வேயில் வேலை பார்க்க வேண்டும் எனப்து பல தமிழக இளைஞர்களின் கனவாக உள்ளது. அதற்கு நீண்ட நாட்களாக முயற்சி செய்வோரிடம் கேட்டால் லோகோ பைலட் மற்றும் ஸ்டேசன் மாஸ்டர், டிக்கெட் பரிசோதகர் போன்ற வேலையை அதிகம் விரும்புவார்கள். இதில் ஸ்டேசன் மாஸ்டர் வேலைக்கு எவ்வளவு சம்பளம், பணி என்ன என்பதை இப்போது பார்க்க போகிறோம்.
இந்திய ரயில்வேயில் ஸ்டேஷன் மாஸ்டர் ஆக பணியாற்ற விரும்புவோர் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டம். RRB ntpc நடத்தும் தேர்வை எழுதி வெற்றி பெற்றால் ஸ்டேஷன் மாஸ்டர் பணியில் சேரலாம்.

ஸ்டேசன் மாஸ்டர் பணி என்பது ஏதோ ரயில் வரும் போது பச்சை கொடியை ஆட்டிவிட்டு மற்ற நேரங்களில் அமைதியாக இருக்கலாம் என்று நினைத்துவிடாதீர்கள். ஸ்டேஷனில் நிற்கும் ஒவ்வொரு ரயிலுக்கும் எச்சரிக்கை மற்றும் உத்தரவுகளை இவர் தான் பிறப்பிக்க வேண்டும். சிறிய ரயில் நிலையங்களில், ஸ்டேஷன் மாஸ்டர்களுக்கு டிக்கெட், பார்சல் புக்கிங், முன்பதிவு போன்ற பணிகளும் தருவார்கள்.
பெரிய ரயில் நிலையங்களில் ரயில்கள் எவை எவை வந்துள்ளன. எவை எவை எங்கு நிற்க வேண்டும் என அந்த ரயில் நிலையத்தின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவது போன்ற பல பணிகள் அவருக்கும் இருக்கும். ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால் மீட்புப் பணிகள் மேற்கொள்ள தயாராக இருக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளையும் இவரே ஒருங்கிணைத்து செய்ய வேண்டும். ரயில் நிலையத்தை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டும்.
ரயில் பயணத்தை வசதியாகவும், பாதுகாப்பாகவும், வேகமாகவும் செய்ய ஸ்டேசன் மாஸ்டர் சுறுசுறுப்பாக வேலை செய்ய வேண்டும். ரயில்கள் சரியான நேரத்தில் எந்தத் தடையும் இல்லாமல் நிலையத்திற்கு வருவதையும் வெளியேறுவதையும் உறுதி செய்வதே ஸ்டேசன் மாஸ்டரின் தலையான பணியாகும். பொதுவாக ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் நான்கு ஸ்டேஷன் மாஸ்டர்கள் இருப்பார்கள். அவர்கள் ஷிப்டுகளில் வேலை செய்கிறார்கள். சிறிய ரயில் நிலையங்களில் ஸ்டேசன் மாஸ்டர்கள் எண்ணிக்கை மிக குறைவாகவே இருக்கும். ஒருவரோ அல்லது இருவரோ இருப்பார்கள்.
ஸ்டேசன் மாஸ்டர் பணிக்கு எவ்வளவு சம்பளம்: ரயில்வேயில் ஸ்டேசன் மாஸ்டர்களுக்கு நல்ல சம்பளம் வழங்கப்படுகிறது. ரயில்வே பல ஆயிரம் பேரை ஆண்டு தோறும் பணி அமர்த்தும் நிலையில், இதற்கு தமிழக இளைஞர்கள் அதிகம் தயராக வேண்டும். இதுகுறித்து விழிப்புணர்வும் அதிகரிக்க வேண்டும். ரயில்வேயில் ஸ்டேசன் மாஸ்டர்களுக்கு அவர்கள் பணியாற்றும் நகரத்தை பொறுத்து சம்பளம் தீர்மானம் ஆகிறது.
ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் சம்பள விவரங்களை இப்போது பார்ப்போம்:
அடிப்படை ஊதியம் 35,400 ரூபாய்
கிரேட் ஊதியம் 4200 ரூபாய்
DA (தற்போது அடிப்படை ஊதியத்தில் 34%) ரூ.12,036
போக்குவரத்து அலவென்ஸ் (நிலையானது) ரூ. 2016
HRA (இடத்திற்கு ஏற்ப மாறுபடும்)- குறைந்தபட்சம் ரூ.3186
மொத்த சம்பளம்: 56,838 ரூபாய் ஆரம்பத்திலேயே இந்த சம்பளம் இருக்கும். இதில் பெருநகரங்கள், சிறிய நகரங்கள், கிராமபுறங்கள் என ஒவ்வொரு பகுதியை பொறுத்து ஊதியம் சிறிது மாறுபடும்.
ஊதிய உயர்வு, பதவி உயர்வுக்கு பின் இந்த சம்பளம் லட்சத்திற்கு கூட செல்லும். ஒரு ஸ்டேஷன் மாஸ்டருக்கு பதவி உயர்வுக்குப் பிறகு கிடைக்கும் முதல் பதவி ஸ்டேஷன் சூப்பிரண்டு என்ற பதவி தான். இரண்டாவது உதவி இயக்க மேலாளர். இறுதியாக பிரிவு இயக்க மேலாளராக பதவி உயர்வு கிடைக்கும்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications