ரயில்வேயில் வேலை.. மாதம் 44 ஆயிரம் சம்பளம்! உடனே அப்ளை பண்ணுங்க.. சூப்பர் சான்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் எனப்படும் ஆர்ஆர்பி பாராமெடிக்கல் எனப்படும் துணை மருத்துவ பணியாளர்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 434 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 44 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்னென்ன தகுதிகள் வேண்டும் என்பதை இங்கு பார்க்கலாம்.

இந்திய ரயில்வேயில் ஏற்படும் காலிப்பணியிடங்களை ஆர்.ஆர்.பி எனப்படும் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் நிரப்பப்படுகிறது. காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. அந்த வகையில் தற்போது பாராமெடிக்கல் எனப்படும் துணை மருத்துவ பணியாளர்களில் உள்ள காலிப்பணியிடங்களை ஆர்.ஆர்.பி வெளியிட்டுள்ளது. இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

rrb-recruitment-2025-apply-now-for-434-paramedical-staff-vacancies

பணியிடங்கள் விவரம்:

1. நர்சிங் கண்காணிப்பாளர் - 272
2. டயாலிசிஸ் டெக்னீசியன் - 04
3. சுகாதாரம் மற்றும் மலேரியா இன்ஸ்பெக்டர் கிரேடு III - 33
4. மருந்தாளுநர் (நுழைவு தரம்) - 105
5. ரேடியோகிராஃபர் எக்ஸ்-ரே டெக்னீசியன் - 04
6. ECG டெக்னீசியன் - 04
7. ஆய்வக உதவியாளர் கிரேடு II - 12 என மொத்தம் 434 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கல்வித் தகுதி:

பணியின் தன்மைக்கேற்ப கல்வித் தகுதி மாறுபடும். நர்சிங் கண்காணிப்பாளர் பணிக்கு பொது நர்சிங் உள்ளிட்ட படிப்புகளை முடித்து இருக்க வேண்டும். டயாலிசிஸ் டெக்னீஷியன் பணிக்கு பிஎஸ்சி ( Diploma in Haemodialysis) உள்ளிட்டவற்றுடன் அனுபவமும் கோரப்பட்டுள்ளது.

மருந்தாளுநர் பணிக்கு 10 மற்றும் 12 வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவுடன் அதற்கு இணையான டிப்ளமோ முடித்து இருக்க வேண்டும். அல்லது பி.பார்ம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி பற்றிய முழு விவரங்களை விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

வயது வரம்பு:

நர்சிங் கண்காணிப்பாளர் பணிக்கு 20 வயது முதல் 43 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதர பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது வரம்பு 36 ஆகும். அரசு விதிகளின்படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ஐந்து ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் சலுகைகள் அளிக்கப்படும்.

சம்பளம் எவ்வளவு?

1. நர்சிங் கண்காணிப்பாளர் - ரூ.44,900/-
2. டயாலிசிஸ் டெக்னிஷியன் - ரூ.35,400/-
3. சுகாதாரம் மற்றும் மலேரியா ஆய்வாளர் கிரேடு III - ரூ.35,400/-
4. மருந்தாளர் - ரூ.29200/-
5. ரேடியோகிராஃபர் எக்ஸ்-ரே தொழில்நுட்ப வல்லுநர் - ரூ.29,200/-
6. ஈசிஜி டெக்னிஷியன் - ரூ.25,500/-
7. ஆய்வக உதவியாளர் கிரேடு II - ரூ.21,700/-

தேர்வு முறை:

கணினி வழி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி , உள்ளிட்ட பிரிவினருக்க்கு ரூ.250 செலுத்த வேண்டும். தேர்வு எழுதிய பிறகு இந்த தொகை திருப்பி அளிக்கப்படும். பொது பிரிவினருக்கு ரூ.400 திருப்பி அளிக்கப்படும்.

விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கும் நாள் 09.08.2025 ஆகும். விண்ணப்பிக்க வரும் 08.09.2025 கடைசி நாளாகும்.

தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.rrbchennai.gov.in/

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+