ரயில்வேயில் 9 ஆயிரம் பணியிடங்கள்.. வேலை தேடும் இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க.. ஒரு வாரம் தான் இருக்கு
சென்னை: ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியமான ஆர்.ஆர்.பி ரயில்வேயில் காலியாக உள்ள 9,000 டெக்னிஷியன் பணியிடங்களை நிரப்புவர்தற்கான அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. வரும் 8 ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் என்பதால் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பித்து கொள்ளவும்.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் இந்திய ரயில்வே. இந்தியாவிலேயே அதிக ஊழியர்களை கொண்ட பொதுத்துறை நிறுவனமாகவும் ரயில்வே உள்ளது. இந்திய ரயில்வேயில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் அவ்வப்போது அறிவிப்பு வெளியிடப்பட்டு நிரப்பப்படுகின்றன.

இந்த நிலையில், ரயில்வேயில் காலியாக உள்ள 9,000 டெக்னிஷியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியாகியது. ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியமான ஆர்.ஆர்.பி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பணியிட விவரம்: டெக்னீசியன் கிரேட் - I சிக்னல் பணிக்கு 1092 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதேபோல் டெக்னீசியன் கிரேட் - II பணிக்கு 8,052 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கல்வி தகுதி:
* டெக்னீசியன் கிரேட் - I சிக்னல் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இயற்பியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேஷன் உள்ளிட்ட படிப்புகளில் இளங்கலை பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும் அல்லது 3 ஆண்டு டிப்ளமோ, என்ஜினீயரிங் படிப்பை மேற்கூறிய பாடங்களை ஒரு பாடமாக வைத்து முடித்திருத்தல் அவசியம்.
* டெக்னீசியன் கிரேட் - II பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஐடிஐயில் பிட்டர், பிட்டர் (ஸ்ட்ரக்சர்), போர்கர் அண்ட் ஹிட் ட்ரிட்டர், மெக்கானிக் (மோட்டார் வெகிள்), பவுண்ட்ரிமேன், பேட்டர்ன் மேக்கர், மாடூலர் (ரெப்ஃரக்டரி), கார்பென்டர், வெல்டர், பிளம்பர், பைப் பிட்டர், எலக்ட்ரிசீயன், மெக்கானிக் ஆட்டோ எக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், வயர்மேன், எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், மெக்கானிக் பவர் எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக் டீசல், மெக்கானிக் (ரீப்பேர் அண்ட் மெயின்டனென்ஸ் ஆஃப் ஹெலி வெகிள்), மெக்கானிக் ஆட்டோமொபைல், டிராக்டர் மெக்கானிக், மெஷினிஸ்ட், உள்பட பிற மெக்கானிக் சார்ந்த படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: ரயில்வே டெக்னிஷியன் Grade I signal பதவிக்கு 18 வயது முதல் 36 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். டெக்னிஷியன் கிரேட் III பதவிக்கு 18 - வயது முதல் 33 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணம்: கணிணி வழியே தேர்வு நடைபெறும். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி உள்ளிட்ட பிரிவினருக்கு ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். பொது பிரிவினர் ரூ.500 செலுத்த வேண்டும்.
சம்பளம் எவ்வளவு?:
டெக்னீசியன் கிரேட் - I சிக்னல் பணிக்கு மாதம் ரூ.29,200 சம்பளமாக வழங்கப்படும். அதேபோல் டெக்னீசியன் கிரேட் - II பணிக்கு மாதம் ரூ.19,900 சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க அவகாசம் மார்ச் 9 ஆம் தேதி தொடங்கியது. வரும் 8 ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இன்னும் 4 நாட்களே இருப்பதால் இதுவரை விண்ணப்பிக்காத விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து விடுங்கள்.. https://www.rrbchennai.gov.in எனும் இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
தேர்வுக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருப்பின் பணி நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை [email protected] இ-மெயில் மூலம் அல்லது 9592001188 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தீர்த்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு அறிவிப்பு, விண்ணப்பிக்க இந்த https://www.rrbchennai.gov.in/ இணையதளம் வாயிலாக சென்று பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications