ரயில்வேயில் வேலை.. 10 ஆம் வகுப்பு படிச்சிருந்தா போதும்.. நோ எக்ஸாம்! விண்ணப்பிப்பது எப்படி? விவரம்
சென்னை: வடக்கு ரயில்வேயில் 3093 பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான கல்வித்தகுதி என்ன, யார் யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும் என்ற விவரங்களை இங்கே பார்க்கலாம்.
ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை ரயில்வே ஆட்சேர்ப்பு பிரிவு (RRC) நடத்தி வருகிறது. ரயில்வே துறையில் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப அவ்வப்போது அறிவிப்பு வெளியிட்டு பணியிடங்கள் நிரப்பபடும். வழக்கமான பணியிடங்களை தவிர அப்ரண்டிஸ் (பயிற்சி) பணியிடங்களும் நிரப்பபட்டு வருகின்றன.

அந்த வகையில் தற்போது வடக்கு ரயில்வேயில் 3093 பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான கல்வித்தகுதி என்ன, வயது வரம்பு எவ்வளவு, சம்பளம் எவ்வளவு, விண்ணப்பிக்க கடைசி நாள் என்ன போன்ற விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்.
வயது வரம்பு: அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 15-வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். 24 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு. எஸ்.சி/ எஸ்.டி பிரிவினருக்கு வயது வரம்பில் 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு உண்டு.
கல்வி தகுதி: கல்வி தகுதியை பொறுத்தவரை எஸ்.எஸ்.எல்.சி முடித்து இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவது அவசியம். துறை சார்ந்த பிரிவில் ஐடிஐ முடித்து இருக்க வேண்டும். கல்வி தகுதி குறித்த தெளிவான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் தேர்வு அறிப்பில் இடம் பெற்றுள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கும் முன்பாக அதை நன்கு படித்து அறிந்து கொள்ளாலாம்.
விண்ணப்ப கட்டணம்: தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ. 100 செலுத்த வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் அப்ரண்டீஸ் பணிக்கு விண்ணப்பதாரர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். ஒப்பந்தம் மற்றும் ஊதியம் ஆகியவை நடைமுறையில் உள்ள விதிகளை பின்பற்றி இருக்கும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு மெரிட் லிஸ்ட் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு எதுவும் கிடையாது. விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் 11.01.2024 ஆகும்.
மெரிட் லிஸ்ட் எப்போது: தோராயமாக வரும் 12.02.2024 அன்று மெரிட் லிஸ்ட் வெளியாகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு குறித்து முழு விவரங்களை தெரிந்துகொள்ள https://rrcnr.org/rrcnr_pdf/Act_Apprentice_2023.pdf இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
-
மத்திய அரசின் நிலக்கரி நிறுவனத்தில் வேலை! 660 காலியிடங்கள்! என்ஜினியரிங் முடிச்சவங்களுக்கு ஜாக்பாட்! -
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications