கிராம வங்கிகளில் வேலை.. 13,217 பணியிடம்.. தேதி முடிய போகுது.. மறந்துடாதீங்க.. சூப்பர் சான்ஸ்
சென்னை: கிராம வங்கிகளில் காலியாக உள்ள 13,217 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியானது. அலுவலக உதவியாளர் உள்ளிட்ட இந்த பணியிடங்களுக்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் இன்னும் ஓரிரு தினங்களில் முடிய உள்ளது. எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே விண்ணப்பித்து விடுங்கள்.
நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்கள், வங்கி பணியாளர் தேர்வு ஆணையம் வாயிலாக நிரப்பப்படுகின்றன. இதனால், ஐபிபிஎஸ் வெளியிடும் தேர்வு அறிவிப்புகளை தேர்வர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து இருப்பார்கள்.

இந்த நிலையில்தான் கிராம வங்கிகளில் காலியாக உள்ள 13,217 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியானது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அவகாசம் இன்னும் ஓரிரு தினங்களில் முடிய உள்ளது. தேர்வர்களுக்கு மீண்டும் ஒரு நினைவூட்டலாக ஐபிபிஎஸ் வெளியிட்ட அறிவிப்பை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
அலுவலக உதவியாளர்கள் - 7,972
அதிகாரி ஸ்கேல் I - 3,907
அதிகாரி ஸ்கேல் II (பொது வங்கி அதிகாரி) - 854
அதிகாரி ஸ்கேல் II (IT) - 87
அதிகாரி ஸ்கேல் II (CA) - 69
அதிகாரி ஸ்கேல் II (சட்டம்) - 48
அதிகாரி ஸ்கேல் II (கருவூல மேலாளர்) - 16
அதிகாரி ஸ்கேல் II (சந்தைப்படுத்தல் அதிகாரி - MO) - 15
அதிகாரி ஸ்கேல் II (வேளாண் அதிகாரி) - 50
அதிகாரி ஸ்கேல் III (மூத்த மேலாளர்) - 199
என மொத்தம் 13,217 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வி தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்திலிருந்து ஏதாவது ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் மாநிலத்தின் உள்ளூர் மொழி நன்கு தெரிந்திருக்க வேண்டும். அதாவது, தமிழகத்தில் உள்ள பணியிடங்களுக்கு தமிழ் தெரிந்திருக்க வேண்டும். பணியிடங்களுக்கு தகுந்தபடி கல்வித் தகுதி மாறுபடுகிறது.
Officer Scale I பணிக்கு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டம். விவசாயம், கால்நடை அறிவியல் போன்ற பிரிவுகளில் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதேபோல பணியிடங்களுக்கு தகுந்தபடி மாறுபடும், அனுபவமும் கோரப்பட்டுள்ளது. இதுபற்றிய விவரங்களை தேர்வு அறிவிப்பில் தேர்வர்கள் தெரிந்து கொள்ள முடியும்.
வயது வரம்பு:
அலுவலக உதவியாளர் பணிக்கு: 18 முதல் 28 வயது வரை
அதிகாரி ஸ்கேல் I: அதிகபட்சம் 30 வயது
ஸ்கேல் II: 32 வயது
ஸ்கேல் III: 40 வயது
தேர்வு முறை:
முதல் நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முகத் தேர்வு (அதிகாரி ஸ்கேல் I, II, III க்கு மட்டும்) அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.
தமிழகத்தில் சென்னை, கோவை, கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, மதுரை, கன்னியாகுமரி, நாகர்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூர், தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, திருப்பூர், வேலூர், விருதுநகர் ஆகிய இடங்களில் நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன் வழியாக தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணத்தை பொறுத்தவரை SC/ST/PwBD பிரிவினருக்கு ரூ.175 ஆகும். மற்றவர்களுக்கு ரூ.850 ஆகும். ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்ப கட்டணத்தை செலுத்த முடியும். இன்று முதல் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.09.2025 ஆகும். இன்னும் 4 நாட்கள் மட்டுமே அவகாசம் இருப்பதால் தகுதியும் ஆர்வமும் இருக்கக்கூடிய தேர்வர்கள் மறக்காமல் விண்ணப்பித்துவிடவும். விண்ணப்பிக்கும் முன்பாக அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பினை படித்து உறுதி செய்து கொள்ளவும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: Click Here












Click it and Unblock the Notifications