50 மாவட்ட நீதிபதி பதவிக்கு தேர்வு.. மனிதநேய அறக்கட்டளை இலவச பயிற்சி.. சைதை துரைசாமி அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: 50 மாவட்ட நீதிபதி பதவிக்கு தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சிலுடன் இணைந்து மாவட்ட நீதிபதிகள் தேர்வுக்கு மனிதநேய அறக்கட்டளை இலவச பயிற்சி அளிக்கிறது. இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என சைதை துரைசாமி அறிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி மனிதநேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகம்' என்ற பெயரில் பயிற்சி மையம் நடத்தி வருகிறார். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற சிவில் சர்வீஸ் பதவிகளுக்கு சேர விரும்புவோர், டிஎன்பிஎஸ்சி தேர்வில் வென்று உயர் பதவியில் அடைய விரும்பு ஏழை மக்களுக்காக இலவச பயிற்சியை அளித்து வருகிறது.

 saidai duraisamys manithaneyam arakkattalai giving free coaching for 50 District Judges Examination

இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மாவட்ட நீதிபதி பதவிக்கு தேர்வு நடத்த போகிறது. இந்நிலையில் மனிதே நேய அறக்கடை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உடன்இணைந்து இலவச பயிற்சியை வழங்க போவதாக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மனிதநேயம் மையத்தின் அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "டி.என்.பி.எஸ்.சி. சார்பில் 50 மாவட்ட நீதிபதி பதவிகளுக்கு 30.9.2023 அன்று முதல் நிலைத்தேர்வும், 2 மற்றும் 3.12.2023 ஆகிய தேதிகளில் முதன்மை எழுத்து தேர்வும் நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் மனிதநேய மையத்துடன் இணைந்து இதற்கான பயிற்சி வகுப்புகளை நடத்தப்பட உள்ளது.

இப்பயிற்சியில் சேர விரும்புவோர்கள் 4-ந் தேதி (இன்று) முதல் 9-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரையில், சென்னை சி.ஐ.டி.நகர் முதல் பிரதான சாலையில் உள்ள மனிதநேயம் கட்டணமில்லா ஐ.ஏ.எஸ். கல்வியகத்துக்கு நேரிலோ அல்லது 044 24358373, 25342739, 24330952, 84284 31107 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டோ விண்ணப்பிக்கலாம்.

'ஆன்லைன்' ([email protected], mntfreeias.com) மூலமாகவும் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கொள்ளலாம். இந்த பயிற்சி வகுப்பு வருகிற 10-ந் தேதி (திங்கட்கிழமை) மாலையில், பார் கவுன்சில் ஆடிட்டோரியத்தில் தொடங்கும்" இவ்வாறு சைதை துரைசாமி கூறியுள்ளார்.

முன்னதாக மனித நேயம் மையத்தில் பயிற்சி பெற்றவர்களில் சிவில் நீதிபதிகளாக 2012-ம் ஆண்டு 38 பேரும், 2014-ம் ஆண்டு 57 பேரும், 2018-ம் ஆண்டு 46 பேரும், 2019-ம் ஆண்டு 40 பேரும் என மொத்தம் 181 பேர் தேர்வாகி இருந்தார்கள். மாவட்ட நீதிபதி பதவிக்கு 2013-ம் ஆண்டு 5 பேரும், 2019-ம் ஆண்டு ஒருவரும் தேர்வாகினர். அரசு உதவி குற்றவியல் வக்கீல் பணிக்கு 2019-ம் ஆண்டு 7 பேரும், 2021-ம் ஆண்டு 12 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+