Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ.38,920 வரை சம்பளம்.. எஸ்ஏஐஎல் நிறுவனத்தில் அசத்தலான வேலை! டிப்ளமோ முடித்தோருக்கு சூப்பர் சான்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசின் எஸ்ஏஐஎல் எனும் நிறுவனத்தில் காலியாக உள்ள 314 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பம் செய்வதன் மூலம் ரூ.38 ஆயிரம் வரையிலான சம்பளத்தை பணியை பெறலாம்.

மத்திய எஃகு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் (Steel Authority Of India Limited or SAIL) செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் ஆண்டுக்கு 18.29 மில்லியன் மெட்ரிக் டன் அளவுக்கு எஃகு உற்பத்தி செய்து வழங்கி வருகிறது.

 SAIL recruitment 2024 for 314 jobs salary up to Rs.38,920


குறிப்பாக இங்கு தயாரிக்கப்படும் எஃகு அரசு சார்பில் பாலம் கட்டுதல் உள்ளிட்ட உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் எஸ்ஏஐஎல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆண், பெண் என இருதரப்பினரும் விண்ணப்பம் செய்யலாம். பணி தொடர்பான முழு விபரம் வருமாறு:

காலியிடங்கள்: தற்போதைய அறிவிப்பின்படி எஸ்ஏஐஎல் நிறுவனத்தில் மொத்தம் 10 பிரிவுகளில் ஓசிடிடி (OCTT) எனும் ஆபரேட்டர் டெக்னீசியன் (டிரெய்னி) பணிக்கு 314 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன்படி ஓசிடிடி - Mettallurgy பணிக்கு 57 பேர், ஓசிடிடி - எலக்ட்ரிக்கல் பணிக்கு 64 பேர், ஓசிடிடி - மெக்கானிக்கல் பணிக்கு 100 பேர், ஓசிடிடி - இன்ஸ்ட்ரூமென்டேஷன் பணிக்கு 39 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதேபால் ஓசிடிடி - சிவில் பணிக்கு 18 பேர், ஓசிடிடி - கெமிக்கல் பணிக்கு 18 பேர், ஓசிடிடி - செராமிக் பணிக்கு 6 பேர், ஓசிடிடி - எலக்ட்ரானிக்ஸ் பணிக்கு 8 பேர், ஓசிடிடி - கம்ப்யூட்டர்/ஐடி (For Mines Only) பணிக்கு 20 பேர், ஓசிடிடி - Draughtsman பணிக்கு 2 பேர் என மொத்தம் 314 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

வயது வரம்பு: இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சமாக 28 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் என்றால் 5 வயது வரையும், ஓபிசி பிரிவினர் என்றால் 3 வயது வரையும், இடபிள்யூஎஸ் பிரிவினர் என்றால் 10 முதல் 15 வயது வரையும் தளர்வு என்பது வழங்கப்படும்.

கல்வி தகுதி: ஓசிடிடி - Mettallurgy பணிக்கு டிப்ளமோ Mettallurgy என்ஜினீயரிங், ஓசிடிடி - எலக்ட்ரிக்கல் பணிக்கு டிப்ளமோ எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங், ஓசிடிடி - மெக்கானிக்கல் பணிக்கு டிப்ளமோ மெக்கானிக்கல், ஓசிடிடி - இன்ஸ்ட்ரூமென்டேஷன் பணிக்கு டிப்ளமோ இன்ஸ்ட்ரூமென்டேஷன், இன்ஸ்ட்ரூமென்டேஷன் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேஷன் அண்ட் கண்ட்ரோல், இன்ஸ்ட்ரூமென்டேஷன் அண்ட் ஆட்டோமேன் என்ஜினீயரிங் முடித்திருக்க வேண்டும்.

ஓசிடிடி - சிவில் பணிக்கு டிப்ளமா சிவில், ஓசிடிடி - கெமிக்கல் பணிக்க டிப்ளமோ கெமிக்கல் என்ஜினீயரிங், ஓசிடிடி - செராமிக் பணிக்கு டிப்ளமோ செராமிக் என்ஜினீயரிங், ஓசிடிடி - எலக்ட்ரானிக்ஸ் பணிக் டிப்ளமோவில் எலக்ட்ரானிக்ஸ், லெக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலி கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ரூமென்டேஷன் என்ஜினீயரிங், ஓசிடிடி - கம்ப்யூட்டர்/ஐடி (For Mines Only) பணிக்கு டிப்ளமோ கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி என்ஜினீயரிங், ஓசிடிடி - Draughtsman பணிக்கு டிப்ளமோ சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், ஆர்க்கடிடெக்ஸ்ரூரல் அசிஸ்டென்ஷிப் உள்ளிட்ட படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.

மாத சம்பளம்: இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு முதல் 2 ஆண்டு பயிற்சி காலமாகும். அதில் முதல் ஆண்டு மாதம் ரூ.16,100 சம்பளமாகவும், 2வது ஆண்டு ரூ.18,300 சம்பளமாகவும் வழங்ப்படும். அதன்பிறகு சம்பளம் ரூ.26,600 முதல் ரூ.38,920 வரை வழங்கப்படும். இதுதவிர பிற அலோவன்ஸ்கள், பணியாளர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கான மருத்துவ வசதி உள்பட பிற சலுகைகள் வழங்கப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் பிப்ரவரி 26ம் தேதி முதல் மார்ச் மாதம் 18 ம் தேதிக்குள் www.sail.co.in எனும் இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டம். விண்ணப்ப கட்டணமாக ரூ.200 ஆக உள்ளது. எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூடி, இஎஸ்எம், துறை சார்ந்த பணியாளர்களுக்கான விண்ணப்ப கட்டணம் ரூ.300 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விண்ணப்பம் செய்யப்படுவோர் கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு (Computer Based Test or CBT), திறனறி தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here

பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+