டிகிரி போதும்.. ரூ. 50,000 வரை சம்பளம்.. கோவை ஜவுளி கல்லூரியில் சூப்பர் வாய்ப்பு.. இன்றே கடைசி நாள்
கோவை: கோவை சர்தார் வல்லபாய் படேல் ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரியில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரியில் நிர்வாகி, உதவிப் பேராசிரியர்கள், உதவியாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த கல்லூரியில் மொத்தம் 7 காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் நவம்பர் 18 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

அசிஸ்டென்ட் ப்ரொஃபசர் இன் பிசினஸ் அனலிட்டிக்ஸ் பணியிடத்துக்கு 2 காலிப் பணியிடங்கள் உள்ளன. M.Sc. / M.E./ MCA / MBA படித்திருக்க வேண்டும். 45 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். ரூ. 38,500 முதல் 52,250 வரை ஊதியம் வழங்கப்படவுள்ளது.
அட்மினிஸ்டிரேட்டிவ் ஆபிசர் பணியிடத்துக்கு ஒரு காலிப் பணியிடம் உள்ளது. இந்தப் பணிக்கு இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். ஐந்து ஆண்டுகள் பணி அனுபவம் வேண்டும். அதேபோல, 50 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். ரூ. 20,000 முதல் 50,000 வரை சம்பளம் வழங்கப்படவுள்ளது.
அசிஸ்டன்ட் பணிக்கு ஒரு காலிப் பணியிடம் உள்ளது. இளநிலை பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். Junior Engineer பணிக்கு ஒரு காலி பணிடம் உள்ளது. Bachelor Degree in Civil Engineering OR Diploma in Civil Engineering படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இரண்டு முதல் நான்கு ஆண்டுகள பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Electrical Supervisor பணிக்கு 1 காலிப் பணியிடம் உள்ளது. Bachelor Degree in electrical Engineering OR Diploma in Electrical Engineering படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இரண்டு முதல் நான்கு ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
Assistant Warden (Women) பணியிடத்துக்கு ஒரு காலிப் பணியிடம் உள்ளது. இளநிலை பட்டப் படிப்பு படித்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். 5 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம். இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
விண்ணப்பதாரர்கள் https://svpistm.ac.in/admin/AppCode/Upload/announcement/58SVPISTM%20recruitment.pdf என்ற இணையதளம் மூலமாக காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த இணையதளம் மூலமாக விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்னர், விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் The Director, SVPISTM, No.1483, Avinashi Road, Peelamedu, Coimbatore – 641004 என்ற முகவரியில் நேரடியாக கலந்துகொள்ளலாம்.
இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://svpistm.ac.in/admin/AppCode/Upload/announcement/58SVPISTM%20recruitment.pdf என்ற இணையதள மூலமாகத் தெரிந்து கொள்ளலாம்.
-
அதிகாலையில் வந்த மெயில்.. மீண்டும் வேலையை காட்டிய மெட்டா! ஊழியர்கள் கண்ணீர்! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்!












Click it and Unblock the Notifications