எஸ்பிஐ வங்கியில் 7,150 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்.. உள்ளூரிலேயே வேலை பார்க்க சான்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் 7,150 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழகத்தில் மட்டும் 396 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். இது குறித்த விவரங்களை இங்கு காணலாம்.

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி எஸ்பிஐ. எஸ்பிஐ வங்கியில் காலியாகும் பணியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பப்படும். அந்த வகையில் தற்போது நாடு முழுக்க மொத்தம் 7,150 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது மத்திய அரசுப் பணியின் கீழ் வரும் ஒரு வருட அப்ரண்டிஸ் பயிற்சியாகும். இந்தியா முழுவதும் உள்ள SBI கிளைகளில் இந்தப் பணியிடங்கள் ஒதுக்கப்படும்.

SBI Announces 7 150 Vacancies Across India Graduates Eligible to Apply

பணியிடங்கள் விவரம்:

குஜராத்தில் 217, ஆந்திரப் பிரதேசத்தில் 709, கர்நாடகாவில் 276, சத்தீஸ்கரில் 93, மத்தியப் பிரதேசத்தில் 285, ஒடிசாவில் 229, லடாக்கில் 15, இமாச்சலப் பிரதேசத்தில் 180, சண்டிகரில் 15, பஞ்சாபில் 345, ஜம்மு & காஷ்மீரில் 300, ஹரியானாவில் 320, புதுச்சேரியில் 18, தமிழ்நாட்டில் 396, அருணாச்சலப் பிரதேசத்தில் 26, நாகாலாந்தில் 20, மேகாலயாவில் 08, திரிபுராவில் 88, அஸ்ஸாமில் 368, மிசோரமில் 54, மணிப்பூரில் 06, தெலுங்கானாவில் 491 காலியிடங்கள் உள்ளன.

ராஜஸ்தானில் 350, மேற்கு வங்கத்தில் 460, அந்தமான் & நிகோபார் தீவுகளில் 42, சிக்கிமில் 50, உத்தரப் பிரதேசத்தில் 561, மகாராஷ்டிராவில் 504, கோவாவில் 16, உத்தராகண்டில் 115, டெல்லியில் 105, பீகாரில் 58, ஜார்கண்டில் 27, கேரளாவில் 403 என மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசம் வாரியாகப் பயிற்சி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

சென்னையில் 33 பணியிடங்கள்

தமிழகத்தில் மட்டும் 396 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. மாவட்ட வாரியாக பார்க்கும் போது, அரியலூர் - 06, செங்கல்பட்டு - 15, சென்னை - 33, கோயம்புத்தூர் - 15, கடலூர் - 10, தருமபுரி - 05, திண்டுக்கல் - 10, ஈரோடு - 10, கள்ளக்குறிச்சி - 05, காஞ்சிபுரம் - 12, கன்னியாகுமரி - 12, கரூர் - 05, கிருஷ்ணகிரி - 10, மதுரை - 18, மயிலாடுதுறை - 05, நாகப்பட்டினம் - 10, நாமக்கல் - 08, வேலூர் - 06, விழுப்புரம் - 15, விருதுநகர் - 10, நீலகிரி - 10, பெரம்பலூர் - 05, புதுக்கோட்டை - 05, இராமநாதபுரம் - 05, இராணிப்பேட்டை - 05, சேலம் - 15, சிவகங்கை - 05, தென்காசி - 05, தஞ்சாவூர் - 12, தேனி - 10, திருவள்ளூர் - 18, திருவண்ணாமலை - 10, திருவாரூர் - 08, திருச்சிராப்பள்ளி - 18, திருநெல்வேலி - 12, திருப்பத்தூர் - 08, திருப்பூர் - 10, தூத்துக்குடி - 15 என காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

2026 ஏப்ரல் 01 நிலவரப்படி, பொதுப்பிரிவு விண்ணப்பதாரர்களின் வயது 20 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். அதாவது, 02.04.1998 முதல் 01.04.2006 (இந்த இரண்டு நாட்களும் உட்பட) வரையிலான காலகட்டத்தில் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். பட்டியல் சாதியினர் (SC), பழங்குடியினர் (ST) பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு, பொதுப்பிரிவில் 10 ஆண்டுகளும், OBC பிரிவில் 13 ஆண்டுகளும், SC/ST பிரிவில் 15 ஆண்டுகளும் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச வயது வரம்பிற்கு மேல் தளர்வு உண்டு.

சம்பளம் எவ்வளவு?

அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாதந்தோறும் 15,000 ரூபாய் வழங்கப்படும்.

தேர்வு முறை:

தேர்வு முறை இரண்டு கட்டங்களாக நடைபெறும். முதலில் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். பின்னர், உள்ளூர் மொழித் தேர்ச்சிச் சோதனையும் (Local Language Proficiency Test - LLPT) நடைபெறும். எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே அடுத்த கட்டமாக உள்ளூர் மொழித் தேர்வு மற்றும் மருத்துவப் பரிசோதனைக்கு அழைக்கப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்

பட்டியல் சாதியினர் (SC), பழங்குடியினர் (ST), முன்னாள் ராணுவத்தினர் (Ex-Servicemen) மற்றும் மாற்றுத்திறனாளிகள் (PWD) ஆகியோருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் 300 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணத்தை ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த முடியும்.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள், இன்று முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி, வரும் ஜூன் 8 ஆம் தேதி ஆகும். விருப்பமுள்ள மற்றும் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள், வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://sbi.bank.in/ மூலம் மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பினை படிக்க: https://sbi.bank.in/documents/77530/57941334/19052026_ENGAGEMENT+OF+APPRENTICE+2026+ADVERTISEMENT+CRPD_APPR_2026-27_07.pdf/fa9015ff-2268-a829-f9e8-8c1b5d55e126?t=1779173730791

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+