Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எஸ்பிஐ வங்கியில் வேலை.. மாதம் 1 லட்சத்திற்கு மேல் சம்பளம்! பிஇ/பிடெக் படிச்சிருக்கீங்களா

Subscribe to Oneindia Tamil

சென்னை: மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியில் வேலைவாய்ப்பு (SBI Bank Job) அறிவிக்கப்பட்டுள்ளது. மேனேஜர், துணை மேனேஜர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.1 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும் என்பதை இங்கு பார்க்கலாம்.

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக எஸ்.பி.ஐ உள்ளது. ஸ்டேட் வங்கி என்று அழைக்கப்படும் எஸ்பிஐ வங்கிக்கு நாடு முழுவதும் வங்கி கிளைகள் உள்ளன. ஆயிரக்கணக்கான ஊழியர்கள் இந்த வங்கிகளில் பணியாற்றுகிறார்கள்.

sbi-bank-job-with-salary-over-1-lakh-per-month-be-btech-graduates-eligible

எஸ்பிஐ வங்கி வேலைவாய்ப்பு

மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்த வங்கி பொதுத்துறை வங்கி என்பதால் அதில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கை நிறைய சம்பளம் சலுகைகள் உள்ளிட்டவைகள் வழங்கப்படுகின்றன. இதனால் எஸ்பிஐ வங்கியில் பணியாற்ற வேண்டும் என்பது தேர்வர்களின் லட்சியமாக உள்ளது. இதனால் எஸ்பிஐ வங்கி வெளியிடும் தேர்வு அறிவிப்பினை தேர்வர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.

சமீபத்தில் கிளர்க் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு இருந்த நிலையில், தற்போது சிறப்பு அதிகாரிகள் (டிஜிட்டல்) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

1. மேலாளர் ( புராடெக்ட்ஸ்- டிஜிட்டல் தளங்கள்) - 34
2. துணை மேலாளர் (புராடெக்ட்ஸ்- டிஜிட்டல் தளங்கள்) - 25

கல்வி தகுதி:

பிஇ/பிடெக் அல்லது எம்.சி.ஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி அவசியம். கூடுதலாக எம்.பி.ஏ படித்த விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். டிஜிட்டல் பேமேண்ட்ஸ்/ ஆட்டோமெட்டிக் ஃபேர் கலெக்‌ஷன், ஃபாஸ்ட் டேக்/ டிஜிட்டல் சொலூஷன்ஸ்/ பின் டெக்/ ரிஸ்க் மேனேஜ்மெண்ட்/ கஸ்டமர் ரிலேஷன்ஷிப் மேனேஜ்மண்ட் உள்ளிட்ட பிரிவுகளில் குறைந்தது 5 ஆண்டுகளில் பணி அனுபவம் அவசியம். கல்வி தகுதி, பணி அனுபவம் குறித்த விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு அறிவிப்பினை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

வயது வரம்பு

02.10.2025 தேதிப்படி குறைந்தபட்சம் 28 வயதும் அதிகபட்சம் 35 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். துணை மேலாளர் பணிக்கு அதிகபட்ச வயது வரம்பு 32 ஆகும். அரசு விதிகளின் படி தேர்வு அறிவிப்பில் 5 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.

சம்பளம் எவ்வளவு?

மேனேஜர்: ரூ.85,920 முதல் 1,05,280 வரை சம்பளம் வழங்கப்படும்.
துணை மேலாளர் (புராடெக்ட்ஸ் - டிஜிட்டல் பிளாட்பார்ம்)- ரூ.64,820 - 93,960 வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு முறை:

தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். தேவையான கல்வி தகுதியும் ஆர்வமும் இருக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பினை ஒரு முறைக்கு இருமுறை நன்கு படித்து உறுதி செய்து கொள்ளவும். ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.

தேர்வு கட்டணமாக ரூ.750 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/ மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு கட்டணம் கிடையாது. ஆன்லைன் வழியாக கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க வரும் 02.10.2025 கடைசி நாளாகும்.

தேர்வு அறிவிப்பினை படிக்க: https://recruitment.bank.sbi/crpd-sco-2025-26-10/apply

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+