Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எஸ்பிஐ வங்கியில் 1,511 காலிப்பணியிடங்கள்.. மாதம் 93 ஆயிரம் சம்பளம்.. இன்றே கடைசி நாள்! மறந்துடாதீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: எஸ்பிஐ வங்கியில் துணை மேலாளர், உதவி மேலாளர் பதவி உள்பட மொத்தம் 1,511 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். அதிகாரி வேலை என்பதால் மாதம் ரூ.93,000 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால் உடனே விண்ணப்பித்து விடுங்கள்.

எஸ்பிஐ வங்கி நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்று. இந்த வங்கியில் சிறப்பு அதிகாரிகள் (SO) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. இன்றுடன் விண்ணப்பிக்கும் தேதி முடிய இருப்பதால் தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து விடுங்கள். இதற்கான கல்வி தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்ப்போம்.

sbi bank employment

பணியிடங்கள் விவரம்:

ப்ராஜெக்ட் மேனேஜ்மென்ட் & டெலிவரி (துணை மேலாளர் - Systems) - 187 பணியிடங்கள்
இன்ஃப்ரா சப்போர்ட் & கிளவுட் ஆபரேஷன்ஸ் (துணை மேலாளர் - சிஸ்டம்ஸ்) - 412
நெட்வொர்க்கிங் ஆபரேஷன்ஸ் (துணை மேலாளர் - சிஸ்டம்ஸ்) - 80
IT ஆர்கிடெக் (துணை மேலாளர் - சிஸ்டம்ஸ்) - 27
தகவல் பாதுகாப்பு (துணை மேலாளர் - அமைப்புகள்) - 07
உதவி மேலாளர் - சிஸ்டம்ஸ் - 784
Backlog Vacancies (உதவி மேலாளர் - சிஸ்டம்ஸ்) - 14

கல்வி தகுதி: கல்வித்தகுதியை பொறுத்தவரை பணியிடங்களுக்கு ஏற்ப மாறுபடும். துணை மேலாளர் (சிஸ்டம்ஸ்) பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் பிடெக் அல்லது பிஇ (கம்ப்யூட்டர் சயின்ஸ் / எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன்ஸ் அல்லது அதற்கு இணையான படிப்புகள்) படித்து இருக்க வேண்டும். 50 சதவித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். இதே பாடப்பிரிவில் எம்.டெக் / எம்.எஸ்.சி முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி தொடர்பான மேலும் விவரங்களை அறிய தேர்வு அறிவிப்பில் பார்த்து கொள்ளலாம்.

சம்பளம்: துணை மேலாளர் (Systems) பதவிக்கு மாதம் ரூ.64,820 முதல் 93,960 வரை சம்பளம் வழங்கப்படும். உதவி மேலாளர் (சிஸ்டம்) பதவிக்கு மாதம் ரூ.48,480 முதல் 85,920 வரை சம்பளம் வழங்கப்படும்.

வயது வரம்பு: வயது வரம்பை பொறுத்தவரை துணை மேலாளர் பணியிடங்களுக்கு 25 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். உதவி மேலாளர் பணிக்கு 21 வயது முதல் 31 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைகள் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வுகள் உண்டு.

தேர்வு முறை: எழுத்து தேர்வு ஆன்லைன் வழியாக நடைபெறும். எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இதில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு மையங்கள்: நாட்டில் உள்ள பெருநகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். தமிழ்நாட்டை பொறுத்தவரை தேர்வு மையங்களானது சென்னை, மதுரை, நெல்லை, புதுவை போன்ற முக்கிய நகரங்களில் அமைக்கப்படும். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக இன்றே விண்ணப்பித்து விடுங்கள். விண்ணபிக்க இன்று (4.10.2024) தான் கடைசி நாள் ஆகும்.

விண்ணப்ப கட்டணமாக ரூ.750 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி/மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பிரிவினருக்கு தேர்வுக் கட்டணம் கிடையாது. தேர்வு அறிவிப்பினை படிக்க இந்த லிங்கை கிளிக் https://sbi.co.in/ செய்யவும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+