SBI CBO Exam Date 2020: 3,850 வேலைகளுக்கு தேர்வு தேதி அறிவிப்பு.. தேர்வு மையம் குறித்து அலார்ட்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: SBI CBO exam date 2020: 3850 எஸ்பிஐ வட்டார அதிகாரிகள் பணியிடங்களுக்கான தேர்வு நவம்பர் 28ம் தேதி நடைபெறும் என ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா இன்று அறிவித்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பு வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. விண்ணப்பித்தவர்கள் ஆன்லைனில் அறிவிப்பு வெளியான https://sbi.co.in/web/careers இல் சரிபார்க்கலாம்.

எஸ்பிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, இந்த அண்டு நவம்பர் 28 ஆம் தேதி சர்கிஸ் ஆபிசர் ஆட்சேர்ப்பு ( SBI CBO exam) தேர்வு நடைபெறுகிறது.
இந்த தேர்வில் பதிவுசெய்தவர்கள் 2020 நவம்பர் 16 அல்லது அதற்கு முன்னர் மூன்று தேர்வு மையங்களை இணையதளத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

நவம்பர் 28ல் தேர்வு

நவம்பர் 28ல் தேர்வு

இது தொடர்பாக பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வட்டார அலுவலர் பணிக்கான ஆட்சேர்ப்பு தேர்வு 28.11.2020 அன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. விண்ணப்பித்தவர்கள் https://ibpsonline.ibps.in/sbicbodnov20/ என்ற இணைப்பு மூலம் சோதனை மையங்களின் மூன்று தேர்வுகளை சமர்ப்பிக்க வேண்டும்.

மூன்று மையங்கள்

மூன்று மையங்கள்

இந்த லிங்க், எஸ்பிஐ "Career" வலைத்தளத்திலும் உள்ளது, இது 10.11.2020 முதல் 16.11.2020 வரை இந்த லிங்க் செயலில் இருக்கும். விண்ணப்பித்தவர்கள் அனுப்பிய தேர்வைத் தவிர வேறு எந்த மையத்தையும் ஒதுக்குவதற்கான உரிமையை எஸ்பிஐக்கு உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும் "என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்போது ஆவணம் சரிபார்ப்பு

எப்போது ஆவணம் சரிபார்ப்பு

"விண்ணப்பதாரரின் ஆவணம் / தகுதி சரிபார்க்கப்படாமல் ஆன்லைன் தேர்வுக்கான அனுமதி முற்றிலும் தற்காலிகமாக இருக்கும். விண்ணப்பதாரரை நேர்காணலில் அல்லது பணியில் / சேரும்போது (தேர்ந்தெடுக்கப்பட்டால்) அவருடை விவரங்கள் / ஆவணங்கள் சரிபார்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்பிஐ வேலை

எஸ்பிஐ வேலை

பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 3,850 வட்டார அதிகாரிகள் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என கடந்த ஜூலையில் அறிவிப்பு வெளியானது. அதன்பிறகு விண்ணப்பிக்க ஆகஸ்ட வரை காலஅவகாசம் வழங்கப்பட்டது. தற்போது நவம்பர் 28ம் தேதி தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+