SEBI-யில் அரசு வேலை.. மாதம் ரூ.1 லட்சத்திற்கு மேல் சம்பளம்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
சென்னை: இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம், அதாவது செபி தனது நிறுவனத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. காலியாக இருக்கும் 110 கிரேட் ஏ அதிகாரிகள் பணியிடங்களை நிரப்ப இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான கல்வித் தகுதி, தேர்வு செயல்முறை, விண்ணப்பிக்கும் கடைசித் தேதி குறித்து நாம் பார்க்கலாம்.
நமது நாட்டில் பங்குச்சந்தைகள் முறையாகச் செயல்படுகிறதா.. அதில் ஏதாவது தவறு நடக்கிறதா என்பதைச் செபி எனப்படும் இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் தான் கண்காணிக்கும்.. இது மத்திய அரசின் கீழ் இயங்கும் ஒரு அமைப்பாகும். இந்த செபி அமைப்பில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

செபி
தனது நிறுவனத்தில் காலியாக இருக்கும் உதவி மேலாளர் (ஆஃபீசர் கிரேடு ஏ) பணிகளை நிரப்பவுள்ளதாகச் செபி அறிவித்துள்ளது.. இதன் மூலம் 110 காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள், செபியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இப்போதே செபி இணையதளத்திற்குச் சென்றால் இந்த வேலைக்காக விண்ணப்பிக்காமல்.. விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி நவம்பர் 28 ஆகும்.. தொடர்ந்து முதல் கட்டத் தேர்வு அடுத்தாண்டு ஜனவரி 10ம் தேதி நடைபெறும்.. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இரண்டாம் கட்டத் தேர்வு அடுத்தாண்டு பிப்ரவரி 21ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டிலும் தேர்ச்சி பெற்றவர்கள் கடைசியில் நேர்முகத் தேர்விலும் பாஸ் ஆக வேண்டும்.
காலியிடங்கள்
பொதுப் பிரிவு 56, சட்டப் பிரிவு 20, தகவல் தொழில்நுட்பம் 22, ஆராய்ச்சிப் பிரிவு 4, அலுவல் மொழிப் பிரிவில் 3 மற்றும் பொறியியல் பிரிவு 5 என மொத்தமாக 110 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொரு பிரிவுக்கும் இட ஒதுக்கீடு அடிப்படையில் காலியிடங்கள் நிரப்பப்படுகிறது.
சம்பளம் ரூ 62,500 முதல் ரூ.1.05 லட்சம் வரை கிடைக்கும்.
கல்வித் தகுதி
ஒவ்வொரு பிரிவுக்கும் ஒவ்வொரு கல்வித் தகுதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இது தொடர்பாக விரிவாக விளக்கப்பட்டுள்ளது. அதில் செக் செய்து கொள்ளலாம்.
தேர்வு செயல்முறை
இந்தப் பணியிடத்திற்கான தேர்வு செயல்முறை மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட தேர்வு தலா 100 மதிப்பெண்கள் இரு தேர்வுகள் நடக்கும். இரண்டாம் கட்டத்திலும் தலா 100 மதிப்பெண்கள் கொண்ட இரு தேர்வுகள் நடைபெறும். கடைசியாக நேர்முகத் தேர்வு நடத்தப்படும்.
விண்ணப்பக் கட்டணம்
பொது, ஓபிசி மற்றும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்களுக்கு ₹1,000 மற்றும் 18% ஜிஎஸ்டி ஆகும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ₹100 மற்றும் 18% ஜிஎஸ்டி ஆகும். டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகள், நெட் பேங்கிங், ஐஎம்பிஎஸ் மூலம் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தலாம்!
-
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications