கைநிறைய சம்பளம்! இந்திய பங்கு சந்தை நிறுவனமான ‛செபி’யில் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு!

Subscribe to Oneindia Tamil

மும்பை: இந்திய பங்கு சந்தை நிறுவனமான செபியில் கைநிறைய சம்பளத்தில் உதவி மேலாளர் பதவியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

செபி (SEBI or Securities and Exchange Board of India) என்பது இந்தியாவில் பங்கு சந்தை, நிதிச் சந்தைகளை ஒழுங்குப்படுத்தும் கட்டுப்பாட்டு அமைப்பாகும். இது மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்திய பங்கு சந்தை நிறுவனமான செபியில் புதிய வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. இந்த அறிவிப்பின் சில முக்கிய விபரங்கள் வருமாறு:

காலியிடங்கள் எவ்வளவு?

காலியிடங்கள் எவ்வளவு?

செபி நிறுவனத்தில் மொத்தம் 24 பணியிடங்கள் காலியாக உள்ளன. Officer Grade A (Assistant Manager) பிரிவில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பதவிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் பிஇ அல்லது முதுகலை பட்டப்படிப்பை கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், இன்பர்மேஷன் டெக்னாலஜி பிரிவில் முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு-ஊதியம் என்ன?

வயது வரம்பு-ஊதியம் என்ன?

விண்ணப்பத்தாரர்கள் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்சி, ஓபிசி பிரிவினருக்கு அரசு விதிகளின் படி வயது தளர்வு உண்டு. வயதானது 2022 ஜூன் மாதம் 30ம் தேதியின் அடிப்படையில் கணக்கிடப்படும். அடிப்படை சம்பளமாக ரூ.44,500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பிற அலோவன்ஸ்கள் உண்டு.

தேர்வு செய்வது எப்படி?

தேர்வு செய்வது எப்படி?

விண்ணப்பத்தாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்க்காணல் முறையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். முதல்நிலை எழுத்து தேர்வு ஆகஸ்ட் 27 ம் தேதியும், 2ம் நிலை எழுத்து தேர்வு செப்டம்பர் 24ம் தேதியும் நடைபெறும். இதில் தேர்ச்சி பெறுவோருக்கு தேதி அறிவிக்கப்பட்டு நேர்க்காணல் நடத்தப்படும்.

விண்ணப்பம் செய்வது எப்படி?

விண்ணப்பம் செய்வது எப்படி?

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.sebi.gov.in இணையதளத்தின் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்ய 31.07.2021 என்பது கடைசி நாளாகும். விண்ணப்ப கட்டணமாக ரூ.1000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூபிடி பிரிவினருக்க ரூ.100 கட்டணமாக உள்ளது. விண்ணப்பம் செய்ய விரும்புவோர் www.sebi.gov.in இணையதளம் சென்று Careers என்பதை கிளிக் செய்து SEBI Assistant Manager தொடர்பான அறிவிப்பை கிளிக் செய்து, பதிவு செய்ய வேண்டும்.

மேலும் கூடுதல் விபரங்கள் அறிய Click Here

ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+