Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உஷாரா இருங்க..'உங்களையே சிக்க வைக்க போகும் ஆபிசர்ஸ்'.. அப்பட்டமாக மாட்டிக்காதீங்க..புதுசா இருக்கே

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு நிறுவனத்தில் வேலைக்கு அப்ளை பண்றீங்க.. அதற்கு இன்ட்வியூவிற்கும் நீங்க போறீங்கள.. அங்கு உங்களின் உண்மையான கேரக்டரை அதாவது உங்கள் குணத்தை கண்டுபிடிக்க சிலர் சால்ட் அண்டு பெப்பர் டெஸ்ட்டை பயன்படுத்துகிறார்கள். அதென்ன சால்ட் அண்டு பெப்பர் டெஸ்ட் என்பதை இப்போது பார்ப்போம்.

புதிதாக ஒரு கம்பெனிக்கு வேலைக்கு போறீங்க அப்படீன்னா, உடனே அதற்கு ஏற்றமாதிரி பயோ டேட்டா ரெடி பண்ணி, ரெசியூம்களை பக்காவாக கவர் செஞ்சு, நம்மை பற்றி எப்படி எல்லாம் கேள்வி கேட்பார்கள், சுயவிவரத்தை எப்படி பேசி அவர்களை ஈர்ப்பது வரை ரொம்ப கவனமாக இருப்பீங்க..

some company Uses ‘Salt And Pepper Test’ In Job Interview To Find Out your True Character

ஆனால் வேலைக்கு சேர்க்க விரும்புகிற நிறுவனம், உங்கள் திறமை மற்றும் அனுபவத்தை சோதிப்பதைவிட, நீங்க யாரு, உங்க குணம் எப்படி, மற்றவர்களிடம் நீங்கள் எப்படி நடந்து கொள்வீர்கள்,பொறுமையாக செயல்படுபவரா, அல்லது சட்டென கோபப்படுபவரா என்பதை கண்டுபிடிக்க பல்வேறு விஷயங்களை நிறுவன முதலாளிகள் செய்கிறார்கள். சிலர் சால்ட் அண்டு பெப்பர் டெஸ்ட்டையும் பயன்படுத்துகின்றனர்.

இதுபற்றி ரெட்டிட் ( Reddit) யூசர் ஒருவர், தனது முன்னாள் முதலாளி எப்படி பெப்பர் அண்ட் சால்ட் டெஸ்ட் சோதனையை நடத்துவார் என்பதையும், இன்டர்வியூ முடிவுகள் எப்படி இருக்கும் என்பதையும் வெளியிட்டார்.

இதுபற்றி அந்த முன்னாள் நிறுவன இளைஞர் கூறும் போது, "நான் வேலை செய்த நிறுவனம் பல இளைஞர்களிடம் ஒரு நாள் முழுவதும் நேர்காணல் செய்தது. இன்டர்வியூ நடத்திய முதலாளி அவர்களை சாப்பிட கேண்டினுக்கு அனுப்பி வைப்பார். அவர்கள் அங்கு எப்படி சாப்பிடுகிறார்கள். அவர் உப்பு, மிளகு, சாஸ் போன்றவற்றை சாப்பிடும் போது எடுத்துக்கொண்டாரா என்பதையும் முதலாளி பார்ப்பார். இண்டர்வியூ சென்றவர் சாப்பிடவில்லை என்றால் அந்த நபர் வேலைக்கு சேர வாய்ப்பு இல்லை" என்றார்.

அதென்னங்க உப்பு, மிளகு, சாஸை போன்றவற்றை பயன்படுத்துவதை வைத்து எப்படி ஒருவரை முடிவு செய்ய முடியும் என்று கேட்கலாம். விசித்திரமான முறையில் ஒருவரின் கேரக்டரை அறிய இப்படி பலரும் பல்வேறு வழிகளில் முயற்சி செய்கிறார்கள். சாப்பாடு சாப்பிடும் போது அவர் உப்பு அல்லது மிளகு எவ்வளவுபயன்படுத்துகிறார், எப்படி பயன்படுத்துகிறார் என்பதை வைத்து அவரது கேரக்டரை அந்த நிறுவனத்தின் முதலாளி முடிவு செய்வார் என்று சொல்கிறார்கள். என்ன பாஸ் இப்படி எல்லாமா ஓனர் இருப்பாங்க என்று கேட்கலாம். இவரை விடவும் பயங்கரமான விவரமான ஆட்கள் இருக்கிறார்கள்.

ஜிரோ ஆஸ்திரேலியா நிறுவனத்தின் முன்னாள் சிஇஒ ஒருவர், தன்னிடம் இண்டர்வியூவிற்கு வரும் நபர்களிடம் கேள்வி கேட்டு பதில்களை பெறுவதை விட, அவரது அணுகுமுறையைப் பற்றியே அதிகம் சோதிப்பாராம். உதாரணமாக 'காபி கோப்பை தேர்வு' வைப்பாராம்.. காபி கோப்பையில் எப்படி பருகுகிறார். பின்னர் அவர் எப்படி அந்த கோப்பையை எடுத்துக் சென்று வைக்கிறார் என்பதை சோதிப்பாராம். அந்த சோதனையில் வெற்றி பெறுபவரைத்தான் அவர் வேலைக்கு எடுப்பாராம். அதில் தோற்றால் வேலை கண்டிப்பாக கிடைக்காதாம்.

செப்டம்பர் 2021 இல் ஜீரோ ஆஸ்திரேலியா நிறுவனத்தை விட்டு வெளியேறிவர், இந்த விஷயத்தை செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். இதுபற்றி அவர் கூறும் போது, "எங்கள் நிறுவனத்தின் சமையலறைகளில் ஒன்றிற்கு நான் உங்களை அழைத்துச் செல்வேன்,அப்போது நீங்கள் எப்படி கோப்பையுடன் நடந்து என்னுடன் வருவீர்கள் என்பதை பார்ப்பேன். பின்னர் இன்டர்வியூவில கேள்விகளை கேட்பேன். இன்டர்வியூ முடிந்த உடன், உங்களை கவனிப்பேன். நீங்கள் அந்த காலி கோப்பையை மீண்டும் சமையலறைக்கு எடுத்துச் செல்ல விரும்புகிறாரா? என்பதையும் பார்ப்பேன். இதைவைத்தே உங்களை முடிவு செய்வேன்" என்றார்.

இதனிடையே தமிழ்நாட்டில் உள்ள பிரபல நிறுவனம் ஒன்று ஒருவர் நேர்மறையானவரா அல்லது எதிர்மறையானவரா என்பதை கண்டுபிடித்தே வேலைக்கு எடுக்கும். அவர் எதிர்மறையான சிந்தனை உடையவர் என்பதை கண்டுபிடித்தால், நிச்சயம் வேலைகிடைக்காது. அதற்கு அந்த நிறுவனம் பல்வேறு யுக்திகளை கையாளுகிறது. ஒருவரின் திறமையை விட அவர் பாசிட்டிவ் ஆனவரான நெகட்டிவானவரா என்பதையும், அவர் குணநலனையுமே நிறுவனத்தின் முதலாளிகள் விரும்புகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+