நோ எக்ஸாம்! ரயில்வேயில் அசத்தலான வேலை.. என்ஜினீயரிங், டிகிரி, டிப்ளமோ முடித்தவர்களே ரெடியா?
சென்னை: என்ஜினீயரிங், டிகிரி, டிப்ளமோ படிப்பை முடித்தவர்கள் என அனைவருக்கும் ஏற்ப ரயில்வேயில் ஜூனியர் டெக்னிக்கல் அசோசியேட்ஸ் எனும் பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு இன்றி மதிப்பெண், நேர்க்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்து துறையாக ரயில்வே விளங்கி வருகிறது. இந்நிலையில் தெற்கு மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த 5ம் தேதி வெளியானது. இந்த அறிவிப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு:

தெற்கு மத்திய ரயில்வேயில் ஜூனியர் டெக்னிக்கல் அசோசியேட்ஸ் பிரிவில் கன்ஸ்ட்ரக்ஸ்/ஓபன் லைன் (Junior Technical Associate - Constructio/ Openline) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தற்போதைய இந்த காலிப்பணியிடங்கள் சிவில், எலக்ட்ரிக்கல் மற்றும் சிக்னல் & டெலிகம்யூனிகேஷன் பிரிவில் நிரப்பப்பட உள்ளது.
இந்த பிரிவுகளில் மொத்தம் 35 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது சிவில் என்ஜினீயரிங் (ஜேடிஏ -வொர்க்ஸ்) பிரிவில் 19 பணியிடங்களும், எலக்ட்ரீக்கல் என்ஜினீயரிங் (ஜேடிஏ -டிராயிங்க்) பிரிவில் 10 பணியிட்ஙகளும், சிக்னல் மற்றும் டெலிகம்யூனிகேசன் (ஜேடிஏ - டிராயிங்க்) பிரிவில் 6 பணியிடங்கள் என மொத்தம் 35 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் என்ஜினீயரிங் படிப்பில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங், ஐடி, கம்யூனிகேசன் என்ஜினீயரிங், கம்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் என்ஜினீயரிங் அல்லது அதனை சார்ந்த படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.
இல்லாவிட்டால் மேற்கூறிய துறைகளில் டிப்ளமோ படிப்புகளை படித்திருக்க வேண்டும். மேலும் எம்எஸ்சி எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் என்ஜினீயரிங், இன்பர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ், பிஎஸ்சி பிரிவில் 3 ஆண்டு சிவில் என்ஜினீயரிங் உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்களுக்கு விண்ணப்பம் செய்யலாம்.
விண்ணப்பம் செய்வோர் குறைந்தபட்சம் 18 வயதும், அதிகபட்சமாக 33 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும் தளர்வு அளிக்கப்படும். வயது வரம்பு என்பது ஜூலை மாதம் 1ம் தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.
பணிக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, ஓபிசி, பெண்கள், சிறுபான்மையினர், பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கான விண்ணப்ப கட்டணம் ரூ.250 ஆக உள்ளது. விண்ணப்ப கட்டணத்தை டிடி ஆக எடுத்து விண்ணப்பத்துடன் அனுப்பி வைக்க வேண்டும். இந்த விண்ணப்பங்களை Secretary to Prinicpal Chief Personnel Officer & Senior Personnel Officer (Engineering), Office Of Principal Chief Personnel Officer, 4th floor, Personnel Department, Rail Nilayam, south Central Railway, secunderabad, Pin 500025 என்ற முகவரிக்கு ஜூன் 30ம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு பணிக்கு விண்ணப்பம் செய்வோர் கல்விதகுதி, அனுபவம் மற்றும் நேர்க்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். இதன்மூலம் இந்த பணியிடங்களுக்கு தேர்வு இல்லை என்பது உறுதியாகி உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஜூன் மாதம் 30ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். இது ஒரு ஒப்பந்த அடிப்படையிலான குறுகிய கால பணியாகும். இந்த பணிக்கான சம்பளம் என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் தகுதி மற்றும் திறன் அடிப்படையில் நல்ல சம்பளம் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய Click Here
-
திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலை.. 27,000 சம்பளம்.. 8ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications