மாதசம்பளம் ரூ.36,000 முதல் ரூ.63,000.. அழைக்கும் சவுத் இந்தியன் வங்கி.. சூப்பர் வாய்ப்பு!
கேரளாவின் திரிச்சூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சவுத் இந்தியன் வங்கி செயல்பட்டு வருகிறது.
சென்னை: சவுத் இந்தியன் வங்கியில் காலியாக உள்ள ப்ரோபேஷனரி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.36 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.63,840 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
இந்தியாவில் முன்னணியில் உள்ள தனியார் வங்கியில் சவுத் இந்தியன் வங்கியும் ஒன்றாகும். இது கேரளாவின் திரிச்சூரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது.
இந்த வங்கியில் காலியாக உள்ள பணியிடங்கள் அவ்வப்போது நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி தற்போது ப்ரோபஷனரி அலுவலருக்கான ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது. இதுதொடர்பான வெளியாகி உள்ள அறிவிப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு:

பணியின் பெயர்-வயது வரம்பு என்ன?
சவுத் இந்தியன் வங்கியில் பல்வேறு ப்ரோபஷனரி அலுவலர் (Probatinary Offier) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. பணிக்கு விண்ணப்பம் செய்வோர் அதிகபட்சமாக 28 வயதுக்குள் இருக்க வேண்டும். வயதானது 28.02.2023 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடப்படும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரை வயது தளர்வு உண்டு.

கல்வி தகுதி-ஊதியம் என்ன?
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழங்களில் சிஎம்ஏ, ஐசிடபிள்யூஏ முடித்திருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.36 ஆயிரமும், அதிகபட்சமாக மாதம் ரூ.63,840 வரையும் சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பம் செய்வது எப்படி?
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.southindianbank.com எனும் இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்ய மார்ச் 19ம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்ப கட்டணமாக ரூ.800 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் என்பது ரூ.200 என உள்ளது.

பணி நியமனம் எங்கு?
இவ்வாறு பணிக்கு விண்ணப்பம் செய்யப்படுபவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். இவ்வாறு தேர்வு செய்யப்படும் நபர்கள் இந்தியாவின் எந்த பகுதிகளில் வேண்டுமானாலும் நியமனம் செய்யப்படுவார்கள் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கு விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications