தெற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு 2023.. ரூ.44,900 சம்பளம்.. விண்ணப்பிப்பது எப்படி?
சென்னை: தெற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.. Nursing Superintendent பணிகளுக்கென 27 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாவும், தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் ஜூன் 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலை தரும் நிறுவனம்: தெற்கு ரயில்வே (இந்திய ரயில்வே)
பணியின் பெயர்: நர்சிங் சூப்ரண்டன்ட் (Nursing Superintendent)
பணியிடங்கள்: 27
விண்ணப்பிக்க கடைசி நாள் எப்போது : 05.06.2023
எப்படி விண்ணப்பிப்பது : ஆன்லைன்
தெற்கு ரயில்வே வேலைக்கான வயது வரம்பு: Nursing Superintendent பணிக்கு விண்ணப்பிக்கும் பொதுவானவர்களுக்கு 42 வயது வரை விண்ணப்பிக்கலாம். ஒபிசி விண்ணப்பதாரர்களுக்கு வயது 45க்குள் இருக்க வேண்டும் என்று என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்சி என்றால் 47 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் அறியலாம்.
Southern Railway Nursing Superintendent கல்வி தகுதி: விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.sc நர்சிங் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம்: தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Level 07 அளவின் படி மாதம் ரூ.44,900/- ஊதியம் பெறுவார்கள்.
தேர்வு செய்யப்படும் முறை : விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written / Online Examination மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, போதிய ஆவணங்களுடன் https://rrcmas.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications