SSC Job: மத்திய அரசு ஊழியர் ஆவதுதான் லட்சியமா? எஸ்எஸ்சி வெளியிட்ட பொன்னான வாய்ப்பு! பிளஸ் டூ பொதும்.. ரெடியா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: எஸ்.எஸ்.சி எனப்படும் ஸ்டாப் செலக்‌ஷன் கமிஷன் புதிய தேர்வு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு கல்வித்தகுதி கொண்ட இந்த பணியிடங்களுக்கு வரும் 07.10.2026 வரை விண்ணப்பிக்க முடியும். நேர்முகத்தேர்வு எதுவும் கிடையாது. போட்டித்தேர்வில் வெற்றி பெற்றால் நேரடியாக தேர்வு செய்யப்படுவார்கள். சம்பளத்தை பொறுத்தவரை 81 ஆயிரம் வரை வழங்கப்படும்.

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை எஸ்.எஸ்.சி எனப்படும் ஸ்டாப் செலக்‌ஷன் கமிஷன் நிரப்பி வருகிறது. மத்திய அரசு ஊழியர் ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் போட்டி தேர்வுகளுக்கு படித்து வரும் லட்சக்கணக்கான தேர்வர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து இருந்த அறிவிப்பு ஒன்றை தற்போது எஸ்.எஸ்.சி வெளியிட்டுள்ளது. 12- ஆம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுபற்றிய விவரங்களை பார்க்கலாம்.

SSC Job CHSL Staff Selection Commission Recruitment 2 536 vacancy interested candidates can apply

பணியிடங்கள் விவரம்:

லோயர் டிவிஷன் கிளர்க் (எல்.டி.சி)/ ஜூனியர் செகரட்டேரியேட் அசிஸ்டண்ட், டேடா எண்ட்ரி ஆபரேட்டர், டேடா எண்ட்ரி ஆபரேட்டர் கிரேடு ஏ ஆகிய பதவிகளில் மொத்தம் 2,536 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கல்வித் தகுதி:

07.10.2026 தேதிப்படி அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். டேடா எண்ட்ரி ஆபரேட்டர் (டி இஓ/டிஇஓ கிரேடு ஏ பணிக்கு 12 ஆம் வகுப்பில் அறிவியியல் மற்றும் கணிதம் பாடங்களை கொண்ட பிரிவை எடுத்து படித்து இருப்பது அவசியம்.

லோயர் டிவிஷன் கிளர்க், ஜூனியர் செகரேட்டரியேட் அசிஸ்டண்ட் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் 12 ஆம் வகுப்பு படித்து இருந்தால் போதும். எந்த பிரிவை எடுத்து படித்து இருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

18 வயது முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அதாவது, 02.08.1999 க்கு முன்பாகவோ 01.08.2008 க்கு பிறகோ பிறந்தவராகவோ இருத்தல் கூடாது.

அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்..

சம்பளம் எவ்வளவு?

எல்.டி.சி/ ஜேஎஸ்ஏ பணிக்கு ரூ.19,900 முதல் ரூ. 63,200 வரை சம்பளம் வழங்கப்படும்.
டேடா எண்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு ரூ.25,500 முதல் ரூ. 81,100 வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு முறை:

கணிணி வழியிலான இரண்டு கட்ட எழுத்து தேர்வு, திறன் தேர்வு, டைப்பிங் டெஸ்ட் ஆகியவை அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு மையங்கள்:

நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் தேர்வுகள் நடைபெறும். தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை, வேலூர், கிருஷ்னகிரி ஆகிய நகரங்களில் நடைபெறும்.

விண்ணப்ப கட்டணம்:

ஆன்லைன் வழியாக தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமும் ஆன்லைனில் செலுத்த வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கிய நாள்: 07.09.2026
விண்ணப்பிக்க அவகாசம் முடியும் நாள்; 07.10.2026
விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய அவகாசம்: 14.10.2026 முதல் 16.10.2026 ஆகும்.

தேர்வு அறிவிப்பை படிக்க: https://ssc.gov.in/api/attachment/uploads/masterData/NoticeBoards/Notice_of_adv_chsl_2026.pdf

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+