SSC Job: 12 ஆம் வகுப்பு முடிச்சிருக்கீங்களா.. மத்திய அரசில் வேலை! எஸ்எஸ்சி வெளியிட்ட செம சான்ஸ்
சென்னை: எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மொத்தம் 731 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். இதுகுறித்த விவரங்களை இங்கே காணலாம்.
ஸ்டாப் செலக்ஷன் எனப்படும் எஸ்.எஸ்.சி மத்திய அரசு துறைகளில் காலியாக இருக்க கூடிய பணியிடங்களை நிரப்பி வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு துறைகளில் உள்ள குரூப் சி&டி பிரிவில் காலியாக உள்ள ஸ்டெனோகிராபர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:
சுருக்கெழுத்தர் (ஸ்டெனோகிராபர்) 'C' & 'D' - 731 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
கல்வித் தகுதியை பொறுத்தவரை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
01.08.2026 தேதிப்படி ஸ்டெனோகிராபர் சி பணியிடங்களுக்கு 18 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அதாவது விண்ணப்பதாரர்கள் 2.08.1996 க்கு முன்பாகவோ, 01.08.2008 க்கு பிறகே பிறந்தவராக இருக்கக் கூடாது.
ஸ்டெனோகிராபர் கிரேடு டி பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது முதல் 27 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். 01.08.2026 அன்றைய தேதிப்படி, விண்ணப்பதாரர்கள் 2.08.1996-க்கு முன்பாகவோ 01.08.2008-க்கு பிறகோ பிறந்தவராக இருக்கக் கூடாது. அரசு விதிகளின்படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
சம்பளம் எவ்வளவு?
தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு ரூ.35,400 சம்பளமாக வழங்கப்படும். தேர்வு முறையை பொறுத்தவரை கணினி வழியிலான தேர்வு மற்றும் சுருக்கெழுத்தில் திறன் தேர்வு நடைபெறும். கணினி வழியிலான தேர்வை பொருத்தவரை 200 கேள்விகள் இடம் பெற்று இருக்கும். 'பொது அறிவுத்திறன் மற்றும் பகுத்தறியும் திறன்' (50 கேள்விகள்), 'பொது விழிப்புணர்வு' (50 கேள்விகள்) மற்றும் 'ஆங்கில மொழி மற்றும் புரிந்துகொள்ளும் திறன்' (100 கேள்விகள்) என இடம் பெற்று இருக்கும்.
ஒவ்வொரு கேள்விக்கும் 4 ஆப்ஷன் இடம் பெற்று இருக்கும். இதில் சரியான விடையை கிளிக் செய்ய வேண்டும். தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் இடம் பெற்று இருக்கும். ஒவ்வொரு தவறான பதிலுக்கும் 0.25 மதிப்பெண்கள் குறைக்கப்படும்.
தேர்வு மையங்கள்:
தேர்வு மையங்களை பொறுத்தவரை நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நடைபெறும். தமிழ்நாட்டை பொறுத்தவரை, சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை, வேலூர், கிருஷ்ணகிரி, தேனி ஆகிய நகரங்களில் நடைபெறும்.
விண்ணப்ப கட்டணம்
தகுதியும், ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும்.
பெண்கள்/எஸ்சி/எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு கட்டணம் எதுவும் இல்லை. https://ssc.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வரும் 15.05.2026 கடைசி நாளாகும்.
-
IT jobs: ரூ.75,000 போனசுடன் ஐடி வேலை.. BCA - B.sc படித்தோருக்கு WIPRO தரும் ‘ஜாக்பாட்' -
மத்திய அரசு வேலை.. 10 ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதும்.. பல ஆயிரங்களில் சம்பளம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications