SSC Jobs: லட்டு மாதிரி வந்த சான்ஸ்.. 25,487 பணியிடங்கள்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்.. எஸ்எஸ்சி மெகா அறிவிப்பு
சென்னை: எஸ்எஸ்சி எனப்படும் ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி வருகிறது. அந்த வகையில் தற்போது 25,487 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். எப்படி விண்ணப்பிப்பது? சம்பளம் எவ்வளவு என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை ஸ்டாப் செலக்சன் கமிஷன் எனப்படும் எஸ்எஸ்சி நிரப்பி வருகிறது. தமிழக அரசு துறைகளில் ஏற்படும் காலிப்பணியிடங்களை எப்படி டிஎன்பிஎஸ்சி நிரப்புகிறதோ அதேபோல, மத்திய அரசு துறைகளில் உள்ள பல்வேறு பணியிடங்கள் எஸ்எஸ்சி உரிய அறிவிப்புகள் வெளியிட்டு நிரப்புகிறது.

மத்திய அரசு வேலை
காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப உரிய அறிவிப்புகள் வெளியிட்டு, தேர்வு நடத்தி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. மத்திய அரசு துறைகளில் பணிக்கு சேர வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் பல லட்சக்கணக்கான தேர்வர்கள் எஸ்எஸ்சி வெளியிடும் இந்த தேர்வு அறிவிப்பை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பார்கள்.
அந்த வகையில் தேர்வர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மெகா அறிவிப்பு ஒன்றை எஸ்எஸ்சி வெளியிட்டுள்ளது. மொத்தம் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
கான்ஸ்டபிள் (GD) - 25,487 காலியிடங்கள்
படை வாரியான காலியிட விவரங்கள்
BSF - 524
CISF - 13,135
CRPF - 5,366
SSB - 1,764
ITBP - 1,099
AR - 1,556
SSF - 23
பெண் விண்ணப்பதாரர்களுக்கான காலியிட விவரங்கள்
BSF - 92
CISF - 1460
CRPF - 124
ITBP - 194
AR - 150
கல்வித் தகுதி:
* அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இருந்து பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு
* 01.01.2026- தேதிப்படி 18 வயது முதல் 23 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அதாவது, விண்ணப்பதாரர்கள் 2003 க்கு முன்பாகவோ, 01.01.2008 க்கு பிறகோ பிறந்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது.
* எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ்சி/எஸ்டி பிரிவினர் என்றால் 28 வயது வரை விண்ணப்பிக்கலாம். ஒபிசி பிரிவினர் என்றால் 26 வயது வரையும், முன்னாள் ராணுவத்தினர் என்றால் அரசு விதிமுறைகளின்படி சலுகைகள் அளிக்கப்படும்.
* கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான உடல் தகுதி குறித்த விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு அறிவிப்பில் தேர்வர்கள் பார்த்து உறுதி செய்து கொள்ளலாம்.
சம்பளம் எவ்வளவு?
* மத்திய அரசின் 7-வது ஊதிய கமிஷன் படி ரூ.21,700/- to ரூ. 69,100/ வரை கிடைக்கும்.
தேர்வு முறை:
* தேர்வு முறையை பொறுத்தவரை உடல் தகுதி தேர்வு / உடல் திறன் தேர்வு/ மருத்துவ பரிசோதனை/சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
* கணிணி வழி தேர்வு நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடைபெறும். தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை, வேலூர், கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் தேர்வு நடைபெறும்.
விண்ணப்பிப்பது எப்படி?
* தகுதியுள்ள தேர்வர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி/எஸ்டி/ மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.
* விண்ணப்பிக்க வரும் 31.12.2025 கடைசி நாளாகும். விண்ணப்பங்களை திருத்த அவகாசம்: 08.01.2026 முதல் 10.01.2026 (23:00) ஆகும்.
* தேர்வு நடைபெறும் மாதம்: 2026 பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை
* தேர்வு அறிவிப்பினை படிக்க: https://ssc.gov.in/api/attachment/uploads/masterData/NoticeBoards/notice_01122025.pdf












Click it and Unblock the Notifications