அரசு வேலை வேணுமா.. பிளஸ் டூ முடிச்சிருந்தால் போதும்.. கை நிறைய சம்பளம்.. உடனே அப்ளை பண்ணுங்க
சென்னை: எஸ்.எஸ்.சி எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தில் மத்திய நேரடி வரிகள் வாரியம், இந்திய வானிலை ஆய்வு மையம், மத்திய விஜிலென்ஸ் கமிஷன், வெளியுறவுத்துறை அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எஸ்.எஸ்.சி எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பி வருகிறது. காலிப்பணியிடங்கள் தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டு அவ்வப்போது தேர்வு நடத்தி நிரப்பப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது மத்திய நேரடி வரிகள் வாரியம், இந்திய வானிலை ஆய்வு மையம், மத்திய விஜிலென்ஸ் கமிஷன், வெளியுறவுத்துறை அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள ஸ்டெனோகிராபர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தேவையான கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு எப்போது? உள்ளிட்ட முழு விவரங்களையும் இங்கே பார்க்கலாம்.

கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து குறைந்தபட்சம் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயது முதல் 30 வயது வரையில் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. அதாவது, எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் தளர்வு உண்டு. இட ஒதுக்கீடு பிரிவில் இல்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் இட ஒதுக்கீட்டு பிரிவில் அதாவது எஸ்.சி/எஸ்.டி பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 15 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பிப்பது எப்படி? ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். https://ssc.nic.in/ என்ற இணையதளம் மூலமாக தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வரும் 23 ஆம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி உளிட்ட பிரிவினருக்கு தேர்வுக் கட்டணம் கிடையாது. ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்ப கட்டணத்தை செலுத்த முடியும்.
தேர்வு எங்கே நடைபெறும்? கணிணி வழித்தேர்வாக நடைபெறும். அக்டோபர் மாதத்தில் தேர்வு நடைபெறலாம் என தோராயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தேர்வு நடைபெறுகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் தேர்வு நடைபெறும்.
தேர்வு முறை: 100 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். பொது அறிவு, ரீசனிங், ஆங்கில அறிவு தொடர்பான கேள்விகள் இடம் பெறும். ஆங்கிலம் மற்றும் இந்தியில் வினாத்தாள் இருக்கும். நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு. மூன்று கேள்விகள் தவறாக விடை அளித்தால் ஒரு மதிப்பெண் குறைக்கப்படும்.
திறன் தேர்வு: கணிணி வழித்தேர்வில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு திறன் தேர்வு (Stenography) நடைபெறும். இந்தி அல்லது ஆங்கிலம் என எதையாவது ஒன்றை விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்து கொள்ளாலம். 10 நிமிடங்களுக்குள் 100 வார்த்தைகள் டைப் செய்யும் திறன் இருக்க வேண்டும். Stenographer (Grade 'C') பதவிக்கு 80 வார்த்தைகள் டைப் செய்ய வேண்டும்.
திறன் தேர்வு எஸ்.எஸ்.சி ஆணையத்தின் பிராந்திய அலுவலகம் அல்லது பிற மையங்களிலோ நடைபெறும். இது குறித்த தகவல்கள் பிறகு தேர்வர்களுக்கு தெரிவிக்கப்படும். இது பற்றிய முழுவிவரங்களுக்கு கீழ்க்கண்ட லிங்கை கிளிக்
https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Final_Notice-Steno-2023_02082023.pdf செய்து தெரிந்து கொள்ளவும்.
-
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications