மாத ஊதியம் ரூ.63,000.. ஸ்டேட் வங்கியில் வேலைவாய்ப்பு.. விண்ணப்பம் செய்ய நல்ல வாய்ப்பு.. முழுவிபரம்
சென்னை: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் மாத சம்பளம் ரூ.36 ஆயிரம் முதல் ரூ.63,840 வரை கிடைக்கும் வகையில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இந்தியாவில் முன்னணி வங்கிகளில் ஒன்று ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா. இந்த வங்கியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள பணியிடங்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் முக்கிய விபரங்களை தொகுத்து இந்த செய்தியில் வழங்க உள்ளோம். அதன் விபரம் வருமாறு:

காலியிடங்கள் எவ்வளவு?
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் Circle Based Officers (CBO) 1,422 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் 1400 பணியிடங்கள் நேரடியானது. 22 பணியிடங்கள் பேக்லாக் செய்யப்பட்டவையாகும். குறிப்பாக போபால், புவனேஸ்வர், ஐதராபாத், கொல்கத்தாக ஆகிய நகரங்களில் தலா 175 பணியிடங்கள், ஜெய்ப்பூர், மகாராஷ்டிராவில் தலா 200 பணியிடங்கள், வடகிழக்கு மாநிலங்களில் 300 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

வயது வரம்பு என்ன?
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோரின் வயது என்பது 21 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பானது செப்டம்பர் மாதம் 30ம் தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும், பிடபிள்யூ பிரிவினருக்கு 10 வயது வரையும் வயது தளர்வு உண்டு.

கல்வி தகுதி - சம்பளம் என்ன?
பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம், கல்லூரிகளில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். தேர்வாகும் நபர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.36 ஆயிரம் சம்பளமாக கிடைக்கும். அதிகபட்சமாக ரூ.63,840 சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பம் செய்வது எப்படி?
விண்ணப்பத்தாரர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்ப கட்டணமாக ரூ.750 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூ பிரவவை சேர்ந்தவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. பணிக்கு விண்ணப்பம் செய்ய நவம்பர் மாதம் 7 ம் தேதி இறுதிநாளாகும்.
கூடுதல் விபரங்களை அதிகார்ப்பூர்வ அறிவிப்பின் மூலம் காண Click Here
ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications